Kamal Haasan - கமலின் அடுத்த படம் மணிரத்னமா இல்லை ஹெச்.வினோத்தா?.. லேட்டஸ்ட் தகவல் இதோ
சென்னை: Kamal haasan(கமல் ஹாசன்) கமல் ஹாசன் அடுத்து மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கிறாரா இல்லை ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய கமல் ஹாசனால் அரசியல் களத்தில் அவர் எதிர்பார்த்ததுபோல் ஜொலிக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து அரசியல் பணிகளிலும் கவனம் செலுத்திவருகிறார். சூழல் இப்படி இருக்க அவர் மீண்டும் நடிக்க வேண்டுமென ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படியும், சூழலுக்கேற்பவும் முடிவு எடுத்த கமல் விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார்.

மெகா ப்ளாக் பஸ்டர் விக்ரம்:
கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியிருந்தார். லோகேஷின் மாயாஜால் மேக்கிங், திரைக்கதை, கமல் ஹாசனின் அசுரத்தனமான நடிப்பு என அனைத்தும் சேர்ந்து அந்தப் படத்தை மெகா ப்ளாக் பஸ்டர் ஆக்கின. இதன் காரணமாக 400 கோடி ரூபாய்வரை படம் வசூலித்தது. விக்ரம் படம் பெற்ற மெகா வெற்றி கமல் ஹாசனுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
இந்தியன் 2:
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கிடப்பில் கிடந்த இந்தியன் 2 மீண்டும் தூசு தட்டப்பட்டது. அந்தப் படத்தின் ஷூட்டிங் உள்நாடு, வெளிநாடு என விறுவிறுப்பாக நடந்தது. இப்போது சென்னையில் ஷூட்டிங் நடந்துவருவதாக தெரிகிறது. படம் தீபாவளிக்கோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் படத்தின் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் பிரமாண்ட வெற்றி பெறும் என்ற நம்பிக்கையி படக்குழு இருக்கிறது.
அடுத்தடுத்த படங்கள்:
இதற்கிடையே மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் இணைவது குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அதேபோல் சதுரங்க வேட்டை, தீரன், துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்திலும் கமல் ஹாசன் நடிக்கவிருப்பதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

மாற்றம் சொன்ன கமல்:
கமல் ஹாசனும் அடிப்படையில் ஒரு இயக்குநர் என்பதால் தான் நடிக்கும் படங்களின் கதைகளில் சின்ன சின்ன திருத்தங்கள் சொல்வது வழக்கம். அந்தவகையில் மணிரத்னம் சொன்ன கதையிலும், ஹெச்.வினோத் சொன்ன கதையின் இரண்டாம் பாகத்திலும் அவர் சில திருத்தங்களை சொன்னதாக தெரிகிறது. இதன் காரணமாக இரண்டு பேரும் இப்போது அதற்கான பணிகளில் இருக்கிறார்களாம்.
முதலில் யார் படம்:
இந்நிலையில் கமல் ஹாசன் மணிரத்னத்தின் இயக்கத்தில் முதலில் நடிக்கப்போகிறாரா இல்லை ஹெச்.வினோத் இயக்கத்தில் முதலில் நடிக்கப்போகிறாரா என்ற கேள்வியை பலரும் எழுப்பிவந்தனர். மணிரத்னத்தின் படத்தில் நடிப்பதற்கு நிறைய நாள்கள் தேவைப்படுகிறதாம். அதேசமயம், வினோத் படத்தில் நடிப்பதற்கு குறுகிய நாள்களே போதுமாம். எனவே வினோத் படத்துக்கு ஆகஸ்ட் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம்வரை கமல் ஹாசன் தேதிகள் ஒதுக்கியிருப்பதாகவும், அவரது இயக்கத்தில்தான் கமல் அடுத்து நடிக்கப்போகிறார் என்றும் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.


Click it and Unblock the Notifications











