மே 1 "தல" பிறந்தநாளன்று வருகிறது வலிமை அப்டேட் ... வெடிவெடிக்க துவங்கிய ரசிகர்கள்..!

சென்னை : தல அஜித் மற்றும் ஹெச்.வினோத் இரண்டாவது முறையாக இணையும் வலிமை படத்தின் அப்டேட் மே 1 தலயின் பிறந்தநாளன்று வருமென ஹெச்.வினோத் உறுதியளித்துள்ளார் .

Recommended Video

Thala Ajith request | Common DP | May Day • Thala 48th Birthday

நடிகர் தல அஜித் தொடர் கமர்ஷியல் படங்களுக்கு இடையே நேர்கொண்ட பார்வை என்ற மாறுபட்ட படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இப்படி மாற்று சினிமாவை தமிழகத்தில் பெரிய நாயகனாக முன்னெடுத்து கொண்டு வந்த பெருமை அஜித்திற்கு சேரும். இதை ஹெச்.வினோத் இயக்கியது மற்றொரு பெரிய விஷயம் .

 h vinoth will give valimai update on may 1

சதுரங்கவேட்டை மற்றும் தீரன் ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் படங்களுக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படம் பெருவாரியாக ரசிகர்களால் கொண்டாடபட்டது. இதன் பின் மீண்டும் தலையை வைத்து ஹெச்.வினோத் இயக்க போவது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது .

பலர் மீண்டும் ஒரு ரீமேக் படத்தையே ஹெச்.வினோத் இயக்க போகிறார் என்று கூறி வந்தார்கள். ஆனால் இந்த படம் ஹெச்.வினோத்தின் எழுத்தில் உருவாகி வருவது படத்தின் பூஜையின் போது தெரியபடுத்தபட்டது .இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரித்து வருகிறார் .

 h vinoth will give valimai update on may 1

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக பாதியிலே படப்பிடிப்பு பணிகள் நிறுத்தபட்டது. இதனால் ரசிகர்கள் மிக பெரிய அளவில் சோகத்தில் ஆழ்ந்தனர் இருந்தும் ரசிகர்கள் அனைவரும் தலயின் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வரும் நிலையில் அவர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது .

 h vinoth will give valimai update on may 1

தற்போது ஹெச்.வினோத் தல அஜித்தின் வலிமை பற்றிய அப்டேட் மே 1 தலயின் பிறந்தநாளன்று வரும் என்று கூறியிருக்கிறார். இந்த சிறிய செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அஜித்தின் ரசிகர்கள் பிறந்தநாளை ஒட்டி மேலும் ஒரு கொண்டாட்டத்திற்கு தயாராகி உள்ளனர் .

 h vinoth will give valimai update on may 1

இதுவரை படத்தின் தலைப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை பற்றிய சுவராஸ்யமான அப்டேட் ஏதும் வரவில்லை மே 1 கட்டாயம் மிக முக்கியமான அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச்.வினோத் என்ன மாதிரி தலையை படத்தில் காட்டியிருக்கிறார் தல அஜித் எப்படி இருக்க போகிறார் என்று ரசிகர்கள் இப்போதே ஆர்வமடைந்து பேசி வருகின்றனர் .மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது ரசிகர்களுக்கு டபுல் ட்ரீட் தான் இதனால் இதையும் குறிப்பிட்டு ரசிகர்கள் உற்சாகமாகி பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X