ஹெச் வினோத் என்கிட்ட அசிஸ்டென்டா இருந்தாரு.. படவிழாவில் ஆர் பார்த்திபன் பகிர்ந்த முக்கிய தகவல்!
சென்னை: சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இயக்கிய இரண்டே படங்களில் தமிழ் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக மாறியவர் இயக்குனர் ஹெச் வினோத்
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை படத்தை முற்றிலும் ஆக்ஷன் கதை களத்தில் இயக்கி பிரமிக்க வைத்தார்
அடுத்ததாக மீண்டும் அஜித் கூட்டணியில் இணைய உள்ள நிலையில் நடிகர் ஆர் பார்த்திபன் பட விழா ஒன்றில் பேசுகையில் ஹெச் வினோத் என்னிடம் உதவியாளராக இருந்தவர் என்ற முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்

டீடெய்லிங் மேக்கிங் ஸ்டைல்
தமிழ் சினிமாவில் திறமை மிக்க இளம் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் இயக்குனர் ஹெச் வினோத். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இவர் எடுக்கும் படங்களில் காட்டும் டீடெய்லிங் மேக்கிங் ஸ்டைல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. அந்த வகையில் வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்கவேட்டை திரைப்படம் நிஜ வாழ்க்கையிலும் பலர் பண ஆசை காட்டி எவ்வாறெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை மிகவும் டீடெய்லிங்காக காட்டியிருந்தது படத்திற்கு மேலும் சுவாரசியம் கூட்டியது. நட்டி நடிப்பில் வெளியான சதுரங்கவேட்டை மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

சுவாரசியமான கதையை
இந்நிலையில் அடுத்ததாக மற்றுமொரு உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். கார்த்தி, ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளியான இப்படம் தமிழக போலீசார் பவாரியா கொள்ளையர்களை எப்படி பின்தொடர்ந்து சென்று கையும் களவுமாக பிடித்தார்கள் என்ற சுவாரசியமான கதையை அனைவரும் வியக்கும் வண்ணம் இயக்கியிருந்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது. தீரன் அதிகாரம் ஒன்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இப்பொழுது முன்னணி இயக்குனராக மாறியுள்ளார்.

வினோத்தின் அதிரடி இயக்கம்
அடுத்ததாக அஜித் கூட்டணியில் இணைந்த வினோத் வலிமை என்ற படத்தை இயக்கினார். முந்தைய படங்களை விடவும் இந்த படத்திற்கு அதிக ஸ்டண்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டது முக்கியமாக பைக் ரேசிங்கை மையப்படுத்தி இப்படம் உருவாகி வந்தது. அஜித் இதுவரை நடித்திராத அளவிற்கு முழுக்க முழுக்க சண்டைக்காட்சிகளில் அனைவரையும் பிரமிக்க வைத்திருந்தார். அஜித்குமாரின் அபார நடிப்பு வினோத்தின் அதிரடி இயக்கம் என வெளியான வலிமை ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது

என்னிடம் உதவியாளராக இருந்தவர்
வலிமையை தொடர்ந்து வினோத் மீண்டும் அஜித் கூட்டணியில் இணைய உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தொடர்ந்து வெளியாகி உள்ளது. இவ்வாறு தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குனராக இருந்து வரும் ஹெச் வினோத் என்னிடம் உதவியாளராக இருந்தவர் என இயக்குனரும் நடிகருமான ஆர் பார்த்திபன் காக்கா குருவி பட விழா மேடையில் இந்த முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











