twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    11 அக்கவுன்ட்.. சம்பாதிச்ச பணமெல்லாம் அந்த மோசடி நிறுவனத்தால் போச்சு.. இழந்த கதை சொன்ன பிரபல நடிகை

    By
    |

    பெங்களூரு: அந்த மோசடி நிறுவனத்தால் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்துவிட்டதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

    போதைப் பொருட்கள் விவகாரம் கன்னட சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போதைப் பொருள் பயன்படுத்தியது மற்றும் அதை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குட்டி தளபதி.. இது நிஜமாவே வேற லெவல்.. வைரலாகும் விஜய் பட ஃபேஸ் ஆப் போட்டோஸ்.. செம க்யூட்!குட்டி தளபதி.. இது நிஜமாவே வேற லெவல்.. வைரலாகும் விஜய் பட ஃபேஸ் ஆப் போட்டோஸ்.. செம க்யூட்!

    ராகிணி திவேதி

    ராகிணி திவேதி

    அவர்கள் கொடுத்த தகவலின்படி, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களுடைய நண்பர்கள் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அதிர்ச்சி தகவல்

    அதிர்ச்சி தகவல்

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. நடிகைகள் சிலர் ஆபாசப்பட வாட்ஸ் அப் குரூப் ஒன்றை தொடங்கி இருந்ததாகவும், அந்த குரூப்பில் ராகிணியும், சஞ்சனாவும் இருந்தனர். சமீபத்தில் அதை டெலிட் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

    நிர்வாண செல்ஃபி

    நிர்வாண செல்ஃபி

    பழைய டேட்டாக்களை தேடி பார்த்தபோது, அதில் சில நடிகைகளின் நிர்வாண செல்ஃபி மற்றும் ஆபாச வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை சஞ்சனா கல்ராணி 11 வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது, தெரியவந்துள்ளது. அந்த கணக்குகளை அமலாக்கத்துறை ஆய்வு செய்த போது 11 வங்கி கணக்குகளிலும் ரூ.40 லட்சம் இருப்பது தெரியவந்துள்ளது.

    அனுப்பியது யார்?

    அனுப்பியது யார்?

    கைது செய்யப்படுவதற்கு முன்பு அந்த கணக்குகளில் அதிகமாக பணம் இருந்ததாகவும் பிறகு அதை சஞ்சனா எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சஞ்சனா கல்ராணியின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பியது யார் என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

    கணக்குகளை முடக்க

    கணக்குகளை முடக்க

    அவர் வங்கிக் கணக்குகளை முடக்கவும் அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தான் சம்பாதித்த பணத்தை பெங்களூரை சேர்ந்த ஐ.எம்.ஏ. என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் அந்த நிறுவனம் பணத்தை மோசடி செய்துவிட்டதாகவும் அவர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஐ.எம்.ஏ. குழுமம்

    ஐ.எம்.ஏ. குழுமம்

    சுமார், 40,000 முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டிய ஐ.எம்.ஏ. குழுமம் கடந்த வருடம் மோசடியில் ஈடுபட்டது. இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருப்புப் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.209 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sanjjanaa galrani had revealed that she had invested and lost a lot of money in the IMA scheme. she ended up losing money allegedly totaling to lakhs in the process to the IMA frauds
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X