அஜித் மச்சினி தெரியும்;விஜய் மச்சினியை பார்த்திருக்கீங்களா...தீயாய் பரவும் போட்டோ
சென்னை : விஜய், அஜித்தின் படங்கள் பற்றிய தகவல்கள் வந்தால் எப்படி உடனடியாக அது டிரெண்டாகும் அதே போல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்களும் தீயாய் பரவும்.
Recommended Video
அஜித் தற்போது ஐரோப்பா டுர் சென்றுள்ள போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. இதற்கிடையில் விஜய் ஐதராபாத்தில் ஷுட்டிங் சென்ற போட்டோவும் தீயாக பரவியது.
கருப்பு நிற மாஸ்க் அணிந்து, ஐதராபாத்தில் வாரிசு பட ஷுட்டிங்கில் கலந்து கொள்ள வந்த விஜய்யின் போட்டோ வெளியாகி செம டிரெண்டானது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

ஐதராபாத் ஷுட்டிங்கில் விஜய்
சமீபத்தில் சென்னையில் நடந்த வாரிசு படத்தின் ஷுட்டிங் ஸ்டில்கள் லீக்காகி இணையத்தை கலக்கியது. இதனால் இந்த சீன்கள் மீண்டும் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது நான்காம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

அக்டோபரில் தளபதி 67 ஷுட்டிங்கா
வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தின் ஷுட்டிங் முடிந்த பிறகு வரும் அக்டோபர் மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த படம் பற்றி எந்த அதிகாரப்புர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வாரிசு படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், ஷுட்டிங் எப்போது முடியும் என தெரியாமல் உள்ளது.

விஜய் -சங்கீதா திருமணம்
இந்நிலையில் விஜய் மச்சினியின் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய், சங்கீதாவை 1999 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் லண்டனை சேர்ந்த தொழிலதிபரான சொக்கலிங்கம் என்பவரின் முத்த மகளாவார்.

விஜய் மனைவியின் பழைய போட்டோ
விஜய் - சங்கீதா தம்பதிக்கு திவ்யா சாஷா, ஜான்சன் விஜய் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு மிக அரிதாகவே பொது இடங்களில் தோன்றி வருகிறார் சங்கீதா. இந்நிலையில் சங்கீதாவின் பழைய போட்டோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் மச்சினியா இது
விஜய்யின் பட செட்டிற்கு தனது தங்கையுடன் சங்கீதா வந்துள்ளார்.இந்த போட்டோ தான் தற்போது வைரலாகி வருகிறது. கிட்டதட்ட ஒரே முக சாயலில் இருக்கும் இவர்களின் இந்த போட்டோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சங்கீதாவின் தங்கை, தனது தந்தையின் பல தொழில்களையும் கவனித்துக் கொண்டு லண்டனிலேயே செட்டில் ஆகி விட்டார்.

எப்போ எடுத்த போட்டோ இது
விஜய்க்கு திருமணமான புதிதில், சங்கீதாவின் தங்கை இந்தியா வந்திருந்த போது இந்த போட்டோ எடுக்கப்பட்டதாம். இந்த போட்டோவை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். அஜித் மச்சினி ஷாமிலியை தான் இதுவரை தெரியும், விஜய்க்கு இவ்வளவு அழகா ஒரு மச்சினி இருக்காரா என ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











