நாக சைதன்யா - சோபிதா திருமணம்.. ஆரம்பித்தது விழா.. செம ஹேப்பியா இருக்காங்களே

ஹைதராபாத்: நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் அவரது தாத்தாவான நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு இத்திருமணம் நடக்கிறது. டோலிவுட்டில் மிகப்பெரிய கவனத்தை பெற்றிருக்கிறது இவர்களது திருமணம். இந்தச் சூழலில் இருவருக்குமான திருமண விழா இன்று முதல் ஆரம்பித்திருக்கிறது. அதுதொடர்பான புகைப்படங்களும் ட்ரெண்டாகியிருக்கின்றன.

சமந்தாவை காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யா அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். அதனையடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கேரக்டரில் நடித்து புகழடைந்த சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்துவந்தார் அவர். அப்போது வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பேசுபொருளாகின. ஆனால் தங்களுக்குள் இருக்கும் காதலை மறைத்தே வைத்திருந்தனர் இரண்டு பேரும். சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது.

naga chaitanya sobitha dhulipala

ஃபிக்ஸ் செய்யப்பட்ட திருமணம்: நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து சைதன்யாவும், சோபிதாவும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டார்கள். மேலும் கடந்த தீபாவளியைக்கூட இரண்டு பேரும் சேர்ந்து கொண்டாடினார்கள். சூழல் இப்படி இருக்க இருவருக்கும் திருமணம் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக டிசம்பர் மாதம் நான்காம் தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அன்னபூர்ணா ஸ்டூடியோஸ்: இந்தத் திருமணமானது ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் நடக்கவிருக்கிறது. திருமண பத்திரிகை தொடர்பான புகைப்படமும் வெளியாகியிருக்கிறது. அந்த ஸ்டூடியோவில் இருக்கும் நாக சைதன்யாவின் தாத்தாவும், நடிகருமான நாகேஸ்வர ராவின் சிலைக்கு முன்பு இத்திருமணம் நடக்கிறது. அப்படி நடப்பது தனக்கு எமோஷனலாகவே ரொம்ப கனெக்ட் ஆகியிருப்பதாகவும்; அவரது ஆசீர்வாதத்தை பெறும்படியாகவும் அது அமையும் என்று நாக சைதன்யா கூறியிருந்தார்.

நெட்ஃப்ளிக்ஸுக்கு நோ: இதற்கிடையே இந்தத் திருமணத்தை நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்ய பிளான் செய்திருப்பதாகவும்; அதற்காக 50 கோடி ரூபாய் பேசப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அது பொய் என்பது உறுதியானது. இதில் அமிதாப் பச்சன், அமீர் கான், ஷாருக்கான், ரஜினிகாந்த், கமல் ஹாசன்,மோகன் லால், மம்மூட்டி என நட்சத்திர பட்டாளத்தையே இன்வைட் செய்வதற்கு நாகார்ஜுனா முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தொடங்கிய விழா: திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் திருமண விழா இன்று முதல் தொடங்கியிருக்கிறது. அதன்படி முதலில் ஹல்தி விழா இன்று நடந்தது. அதில் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி வாழ்த்தினர். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X