ஏன் இப்படி? காதலர் தினத்துக்கு அரை டஜன் படங்கள் ரிலீஸ்? நல்ல தியேட்டர் கிடைக்குமா சாரே?

By

சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு சுமார் அரைடஜன் படங்கள் ரிலீஸ் ஆவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய படங்கள் ரிலீஸ் ஆவது, தமிழ் சினிமா வழக்கம்.

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், கூட்டம் வரும் என்று அந்த காலத்தில் இருந்தே வெள்ளிக் கிழமையை ரிலீஸ் நாள் ஆக்கியுள்ளனர். அது இப்போதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 காதலர் தினம்

காதலர் தினம்

இந்நிலையில், வரும் வெள்ளிக் கிழமையான 14 ஆம் தேதி, காதலர் தினம். இதை முன்னிட்டு சுமார் அரை டஜன் படங்கள் அன்று போட்டிபோடுகின்றன. ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள நான் சிரித்தால் படக்குழு, காதலர் தினத்தை குறி வைத்து கடந்த சில நாட்களாக புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருப்பதாலும் சுந்தர் சி-யின் தயாரிப்பு என்பதாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

அடுத்து அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி நடித்துள்ள படம், ஓ மை கடவுளே. ரொமான்டிக் காமெடி படமான இதன் புரமோஷனும் அதிரடியாக நடந்து வருகிறது. ராட்சசன் தயாரிப்பாளர் டில்லிபாபு தயாரித்துள்ள இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

சர்வர் சுந்தரம்

சர்வர் சுந்தரம்

சந்தானம் நடிப்பில் கடந்த சில வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த சர்வர் சுந்தரம், பெரும் போராட்டத்துக்குப் பிறகு ரிலீஸ் ஆக இருக்கிறது. டகால்டி படம் தந்த தோல்வியை இந்தப் படம் சரிகட்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் சந்தானம் ரசிகர்கள். இயக்குனர் பால்கி, நம் பாரம்பரிய உணவு பற்றி படத்தில் அருமையான மெசேஜ் இருக்கிறது என்கிறார்.

அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல

அமலா பால் நடித்துள்ள அதோ அந்த பறவை போல படம் கடந்த டிசம்பர் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். சில பிரச்னைகளால் அப்போது ரிலீஸ் ஆகவில்லை. இப்போது ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து கே.கே.கண்டி இயக்கியுள்ள டே நைட் என்ற படமும் இந்த கோதாவில் இருக்கிறது. இதற்கிடையே, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் தமிழில் டப் ஆகி ரிலீஸ் ஆகிறது.

தியேட்டர் கிடைக்குமா

தியேட்டர் கிடைக்குமா

வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராஷி கண்ணா, இசபெல் ஆகியோர் நடித்துள்ளனர். இத்தனை படங்கள் ரிலீஸ் ஆனால், சரியான தியேட்டர் கிடைக்குமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இதனால் இப்போது அறிவிப்பு வந்தாலும் கடைசி நேரத்தில் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X