புத்தாண்டின் முதல் வாரம்... அரை டஜன் படங்கள் வெளியீடு!

By Shankar

புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று 6 படங்கள் வெளியாகவிருக்கின்றன. அனைத்துமே லோ பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கலுக்கு முந்திய வாரம் இது. பெரிய பட்ஜெட் படங்களுடன் மோத விரும்பாத அல்லது பொங்கலுக்கு முன் உள்ள இடைவெளியை நிரப்ப சில படங்கள் வெளியாகும்.

அந்த வகையில் இன்று ஆறு தமிழ்ப் படங்களும், கூடவே சில வேறு மொழிப் படங்களும் வருகின்றன.

கள்ளத் துப்பாக்கி

கள்ளத் துப்பாக்கி

விஜய்யின் துப்பாக்கிக்கே சவால் விட்ட படம் என்று கூறப்பட்ட கள்ளத் துப்பாக்கி படம், இதோ அதோ என ஒளிந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரமே வெளியாகும் என்று கூறினார்கள். ஆனால் இன்று வெளியாகப் போகிறது என மீண்டும் அறிவித்துள்ளனர்.

குறும்புக்காரப் பசங்க

குறும்புக்காரப் பசங்க

இதுவும் சின்ன பட்ஜெட் படம்தான். பூங்காவனம் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சஞ்சீவும் மோனிகாவும் நடித்துள்ளனர். மனோஜ்குமாரிடம் உதவியாளராக இருந்த டி சாமிதுரை இயக்கியுள்ளார்.

மயில் பாறை

மயில் பாறை

புதுமுகங்கள் அரச குமார், தேவி நம்பியார் நடித்துள்ள இந்தப் படத்தை, சிவகுமார் பா இயக்கியுள்ளார். இவரும் புதியவர்தான்.

நண்பர்கள் கவனத்திற்கு

நண்பர்கள் கவனத்திற்கு

கிரீன் சேனல் எண்டர்டெயின்மென் படநிறுவனம் சார்பாக சகாதேவன் தயாரித்துள்ள படம் நண்பர்கள் கவனத்திற்கு. குளிர் 100 டிகிரி பட நாயகன் சஞ்சீவ் நடிக்க அவருக்கு ஜோடியாக கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மனிஷாஜித் நடிக்கிறார்.

டைரக்டர் ஆர்.வி.உதயகுமாரிடம் உதவியாளராக இருந்த கே.ஜெயக்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

நிமிடங்கள்

நிமிடங்கள்

சாஷா, ப்ரியங்கா தேசாய், சுமன் நடித்துள்ள படம் நிமிடங்கள். ப்ளூ பார் சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜெயந்தி கீதகிருஷ்ணா இயக்கியுள்ளார்.

கனவு காதலன்

கனவு காதலன்

உதய், சரிதா யாதவ், மீரா கிருஷ்ணன் நடித்துள்ள இந்தப் படத்தை திருநா அண்ணன் என்ற புதியவர் இயக்கியுள்ளார். இது ஒரு காதல் கதை.

கமாண்டோ ஏகே 47

கமாண்டோ ஏகே 47

இந்தப் படங்கள் தவிர, கமாண்டோ ஏகே 47 எனும் ஆங்கில டப்பிங் படமும், அருந்ததி வேட்டை என்ற மலையாள டப்பிங் படமும், மாயக் கத்தி என்ற கொரிய டப்பிங் படமும் வெளியாகின்றன.

இந்திப் படங்கள்

இந்திப் படங்கள்

இந்திப் படங்கள் மேரி ஷாதி கரோ, லியாண்டர் பயஸ் நடித்துள்ள முதல் படமான ராஜதானி எக்ஸ்பிரஸ் மற்றும் டேபிள் நம்பர் 1 படங்களும், தி இம்பாஸிபிள் மற்றும் ரெட் டாவ்ன் ஆகிய படங்களும் வெளியாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X