twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    11 வயது சிறுமியை சீரழித்த அனைவரையும் தூக்கில் போடுங்க: கொந்தளித்த வரலட்சுமி

    By Siva
    |

    சென்னை: 11 வயது சிறுமியை சீரழித்த மிருகங்களின் முகத்தை எதற்காக மறைக்க வேண்டும் என்று வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னையில் 11 வயது சிறுமியை 22 ஆண்கள் 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பள்ளி செல்லும் அந்த சிறுமியை மிரட்டி மிரட்டியே நாசமாக்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 17 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் அழைத்துச் சென்றபோது முகத்தை துணியால் மூடி இருந்தனர்.

    கோபம்

    இந்த மிருகத்தனம் முடிவுக்கு வருமா? மைனரோ, மேஜரோ யாரை பலாத்காரம் செய்தாலும் மரண தண்டனை விதித்தால் தான் இது போன்ற மிருகங்களுக்கு பயம் வரும். இது போன்ற மிருகங்களால் பல உயிர்கள் போயுள்ளது. இது மாற்றத்திற்கான நேரம் என்று ட்விட்டரில் கொந்தளித்துள்ளார் வரலட்சுமி.

    முகங்கள்

    மிருகங்களின் முகங்களை எதற்காக சரியாக தெரியாதபடி பிளர்(blur) செய்கிறீர்கள்...ஒரு சிறுமியை பலாத்காரம் செய்தபோது நீங்கள் உங்களின் முகத்தை மறைக்கவில்லை. அந்த கொடூரன்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் வரு.

    தண்டனை

    இந்த மிருகங்களுக்கு சாவுக்கு மேல பெரிதாக ஒரு தண்டனை கொடுக்கணும் என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    சிறுமியின் வீட்டில் இருந்து புகார் கொடுக்கச் சென்றபோது நடந்த சம்பவத்தை கேட்டு போலீசார் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த செய்தி வெளியானதில் இருந்து பல தாய்மார்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தங்கள் பிள்ளைகளை நினைத்து கவலைப்படுகிறார்கள்.

    English summary
    Actress Varalaxmi Sarathkumar tweeted that, ' Makes me sick to my stomach..Will this barbarism never end..?!? #DeathPenaltyforrape minor or major is the only way to instill fear in demons like these men..so many young lives are being lost n violated cos of these monsters...time for change NOWWW..'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X