அந்த மிருகங்களை தூக்கில் போடுங்க.. புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை.. கொந்தளித்த ஜெயம் ரவி

சென்னை: புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை எனும் பகுதியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கயவர்களை தூக்கில் போட வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

புதுச்சேரி சிறுமியின் கொடூர கொலை பொதுமக்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரின் ஈரக்குலைகளையே நடுங்க வைத்துள்ளது. நாடு முழுவதும் பணக்காரர்களின் பணத்தாசை காரணமாகவும் அரசியல்வாதிகளின் திறனற்ற ஆட்சி காரணமாகவும் போதைப் பொருட்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலேயே சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.

Hang those beasts - Jayam Ravi shows his anger on Pudhucherry girl murder incident

செல்போன்களிலேயே சகல ஆபாச படங்களும் வந்து குவிந்து வருவதால் பள்ளியில் படிக்கும் மாணவர்களே கெட்டுப் போய் விடுகின்றனர். பள்ளி, கல்லூரி, பணியிடங்கள் என எங்கேயும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் மகளிர் தினம் கொண்டாடி கொண்டிருக்கும் தேசமாக இந்தியாவை மாற்றி வருகின்றனர் என பொதுமக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கோபத்தை கொட்டி வருகின்றனர்.

மனசாட்சியே இல்லாத காட்டு மிராண்டிகள்: போதைப்பொருள் புழக்கம் அதிகரித்தால் தாய், தங்கை, குழந்தை என யாருமே தெரியாது என்றும் காமப் பேய்களாக ஆண்கள் மாறி விடுவார்கள் என பலரும் எச்சரித்தாலும், போதைப் பொருள் வியாபாரம் ஜோராக நடைபெற்றுக் கொண்டும் அதற்கு அடிமைகளாக பலரும் மனசாட்சியே இல்லாத மனித மிருகங்களாக சுற்றி வருகின்றனர்.

9 வயது சிறுமி: சித்தா உள்ளிட்ட படங்களில் சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து எரித்துக் கொலை செய்யும் காட்சிகள் பார்க்கும் போதே பதை பதைக்க வைக்கின்றன. இதெல்லாம் வெறும் படங்கள் இல்லை என்றும் நாட்டில் நடக்கும் உண்மை சம்பவத்தை எடுத்துக்காட்டி நம் குழந்தைகளை நாம் தான் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன. வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கடத்திக் கொண்டு போய் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அந்த குழந்தையை கொன்று சாக்கடையில் போட்டு விட்டு குழந்தையை போலீஸார் மற்றும் பெற்றோர்களுடன் தேடுவது போல நாடகமாடியதை எல்லாம் கேட்டாலே ரத்தம் கொதிக்கிறது என கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நாடு எங்கே சென்றுக் கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பி உள்ளனர்.

தூக்கில் போட வேண்டும்: நடிகர் ஜெயம் ரவி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த கொடிய மிருகங்களை தூக்கில் போடுங்கள் என கொந்தளித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் சிறுமியை சிதைத்து கொன்ற 54 வயதான விவேகானந்தன், 17 வயதான கருணாஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

முதலமைச்சர் உறுதி: குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி கடும் தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்த நிலையில், உடலை வாங்கிய உறவினர்கள் புதுச்சேரி முத்தியால்பேட்டை பாப்பம்மாள் கோவில் பகுதியில் உள்ள இடுகாட்டில் சிறுமையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X