சிம்புதேவன் படத்தில் விஜய்க்கு ஜோடி தீபிகாவோ, பிரியங்காவோ இல்லை ஹன்சிகா
சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி தவிர ஹன்சிகாவும் நடிக்கிறாராம்.
விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு அவர் சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய்யின் நாயகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தீபிகா படுகோனே
சிம்புதேவன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனே நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின.

பிரியங்கா
தீபிகா அல்ல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தான் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார் என்று கூறப்பட்டது.

ஹன்சிகா
இறுதியாக விஜய்யுடன் ஜோடி சேரப்போவது தீபிகாவும் இல்லை, பிரியங்காவும் இல்லை ஹன்சிகா தானாம்.

ஸ்ருதி
படத்தில் விஜய்க்கு மற்றொரு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலாயுதம்
ஏற்கனவே வேலாயுதம் படத்தில் விஜய் ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். தற்போது அவர் மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.எஸ்.பி.
விஜய், ஹன்சிகா நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இசையமைக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதோ தேவி ஸ்ரீபிரசாத் ஆகும்.


Click it and Unblock the Notifications











