பிறந்தநாள் அதுவுமா.. பிறந்த மேனியாக.. அது என்ன கையில் ரத்தம்.. வைரலாகும் ஹன்சிகாவின் மஹா போஸ்டர்!

சென்னை: நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு மஹா படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் மஹா படத்தில் ஹன்சிகா லீடு ரோலில் நடித்துள்ளார்.

ஹன்சிகாவுக்கு இந்த படத்தில் ஜோடியாக நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

பான் இந்தியா நடிகை

பான் இந்தியா நடிகை

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள நடிகை ஹன்சிகா பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள ஹன்சிகாவின் 29வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சூப்பர் ஜோடி

சூப்பர் ஜோடி

நடிகை ஹன்சிகா ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் என மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவர்களது ஜோடி பொருத்தம் சூப்பர் என்றும் பலரும் பாராட்டி உள்ளனர்.

பேய் படம்

பேய் படம்

பப்ளியாக வெறும் காதல் படங்களில் லூசுப்பெண்ணாக மட்டும் இல்லை பேய் படங்களில் மிரட்டலாகவும் தன்னால் நடிக்க முடியும் என்று அரண்மனை படத்தில் நடித்து நிரூபித்துள்ளார் ஹன்சிகா. தற்போது அவர் லீடு ரோலில் நடித்து வரும் மஹா படமும் ஹாரர் திரில்லர் படமாகவே உருவாகி வருகிறது.

பிறந்த மேனியாக

பிறந்த மேனியாக

ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு மஹா படக்குழுவினர் ஆடை ஏதும் அணியாமல் பிறந்த மேனியாக ஹன்சிகா இருக்கும் மஹா பட போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், ஹன்சிகாவின் கையில் ரத்தக்கறை படிந்து உள்ளதை பார்த்த ரசிகர்கள், இதை விட நல்ல போஸ்டரை வெளியிட்டு இருக்கலாமே என ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

Recommended Video

Actress Rithika doing household chores | Sameera reddy, Harathi, Jackline, Hansika
எஸ்.டி.அர்

எஸ்.டி.அர்

மேலும், ஹன்சிகாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள நிலையில், சிறப்புத் தோற்றம் என்றாலும், STR என்ற அந்த ஸ்டாம்பை தற்போது வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வமான போஸ்டரில் படக்குழு வெளியிட்டு இருக்கிறது. சிம்பு ஹன்சிகாவின் பிரத்யேக ஸ்டில் ஒன்றும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X