லைவ் ஷோவில் ஹீரோவை பார்த்து லூஸுன்னு சொன்ன ஹன்ஸு!
ஹைதராபாத்: நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் ஹன்சிகா தனது லக்குநோடு பட ஹீரோவை பார்த்து மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியுள்ளார்.
கை நிறைய படங்கள் வைத்து ஓடியோடி நடித்துக் கொண்டிருந்தவர் ஹன்சிகா. தற்போது அவரது நிலைமை பரிதாபமாக உள்ளது. தமிழில் அவர் நடித்துள்ள போகன் படம் நாளை ரிலீஸாகிறது.
தெலுங்கில் அவர் விஷ்ணு மஞ்சுவுடன் சேர்ந்து லக்குநோடு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

விளம்பரம்
லக்குநோடு படத்தை விளம்பரம்படுத்தும் நிகழ்ச்சிகளில் ஹன்சிகாவும், விஷ்ணு மஞ்சுவும் கலந்து கொண்டு வருகிறார்கள். படத்தை விளம்பரப்படுத்த டிவி நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்து கொண்டனர்.

ஜாலி
நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட அந்த விளம்பர நிகழ்ச்சியில் ஹன்சிகாவை விஷ்ணு கிண்டல் செய்து கொண்டே இருந்தார். ஹன்சிகா யோகா செய்து உடல் எடையை குறைத்ததை கூறி அவரை கலாய்த்தார்.

லூஸு
விஷ்ணு மஞ்சு ஹன்சிகாவை ஓவராக கலாய்த்துக் கொண்டிருந்தார். சிரித்துக் கொண்டே இருந்த ஹன்சிகா திடீர் என விஷ்ணுவை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிவிட்டார். ஜாலியாகத் தான்.

ஜிம்
விஷ்ணு மஞ்சு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த கையோடு பூரியும், உருளைக்கிழங்கு மசாலாவும் சாப்பிடுவார். இப்படி செய்தால் இவரால் சிக்ஸ் பேக்ஸ் வைக்கவே முடியாது என்றார் ஹன்சிகா.


Click it and Unblock the Notifications











