டாப்பு டக்கரு ஷார்ப்பு லுக்கரு... வேற லெவலில் போஸ் கொடுத்த ஹன்சிகா!
சென்னை : தளதளவென சப்பியாக இருந்த ஹன்சிகா இப்பொழுது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
சிம்பு, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் இணைந்து நடித்துவரும் தனது 50வது படம் மஹாவை தானே தயாரித்து வருகிறார்.
சமீப காலமாக படங்களில் ஹன்சிகாவை காண முடியாத ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு செம ஸ்டைலிஷான புகைப்படத்தை வெளியிட்டு தெறிக்க விட்டுள்ளார்.

தெலுங்கில் ஹீரோயினியாக
கொழுகொழு பேபியாக ரசிகர்களின் மனதில் சடுகுடு ஓடிக்கொண்டிருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ளார். குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்து இப்பொழுது வெற்றிகரமான முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா முதல் முறையாக ஹீரோயினியாக அறிமுகமானது தெலுங்கில்தான்.

தமிழ் சினிமாவும்
ஸ்டைலிஷ் ஸ்டார் அர்ஜுன் நடிப்பில் வெளியான தேசமுதுரு படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அதே ஆண்டு ஹிந்தியில் ஆப் க சுரூர் என்ற படத்தில் நடித்து பாலிவுட்டிலும் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்டவருக்கு தமிழ் சினிமாவும் சிவப்பு கம்பளம் போட்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் வரவேற்றது.

கொழுக்மொழுக் தேகத்திற்காகவே
மாப்பிள்ளை,எங்கேயும் காதல், வேலாயுதம்,ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 ,ரோமியோ ஜூலியட், புலி, வாலு என எக்கச் சக்கமான வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் ஆஸ்தான முன்னணி ஹீரோயின் பட்டியலில் இணைந்தார். இவரது கொழுக்மொழுக் தேகத்திற்காகவே பல கோடி ரசிகர்கள் இருந்தனர்.

செம ஸ்டைலிஷாக செல்பி
இதுவரை ஹீரோயினியாக மட்டும் இருந்து வந்த ஹன்சிகா தன்னுடைய 50வது திரைப்படமான மஹாவை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மஹா படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள ஹன்சிகா ஒல்லி உடம்பை காட்டி எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இந்த நிலையில் தற்போது ப்ளேஸர் கூலிங்கிளாஸ் என வேற லெவலில் செம ஸ்டைலிஷாக எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு ட்ரெண்டாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











