ஹன்சிகாவின் அடுத்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது... ஒரே ஷாட்டில் உருவாகிறது!

சென்னை : தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் பரபரப்பாக நடித்துக் கொண்டு வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

50 ஆவது படம் மஹா விரைவிலேயே ஓடிடியில் வெளியாக இருக்க அதன் டீசர் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டது.

இப்பொழுது ஹன்சிகாவின் அடுத்த திரைப்படம் ஒரே ஷாட்டில் உருவாக இருக்க அதன் டைட்டில் போஸ்டரும் தற்பொழுது வெளியாகி உள்ளது.

50வது திரைப்படத்தை

50வது திரைப்படத்தை

தளதளனு தக்காளி பழம் போல இருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி இப்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். விரைவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து 2வது இன்னிங்சை தொடங்க உள்ளவர் தன்னுடைய 50வது திரைப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார்.

சிம்பு

சிம்பு

ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள மஹாவில் ஹன்சிகா மோத்வானி இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்பு இதில் கௌரவ தோற்றத்தில் வருகிறார் . வாலு படத்திற்கு பிறகு மீண்டும் ஹன்சிகாவும் சிம்புவும் இணைந்து நடித்து வருவதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஸ்ரீகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வேற லெவல் ரீச்

வேற லெவல் ரீச்

மிகவும் பரபரப்பாக உருவாகி வந்த மஹா விரைவிலேயே ஓடிடியில் அதிரடியாக வெளியாகிறது. இந்த நிலையில் அதன் டீசர் சமீபத்தில் வெளியாகி இணைய தளத்தில் சக்கை போடு போட்டது. டீசரில் பெரும்பாலும் சிம்புவுடன் நடிக்கும் காட்சிகளை இடம்பெற்றிருக்க வேற லெவல் ரீச் பெற்றது.

ஒரே ஷாட்டில்

ஒரே ஷாட்டில்

மஹாவைத் தொடர்ந்து ஹன்சிகா மோத்வானி எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்க இப்பொழுது தெலுங்கில் வித்தியாசமான கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஜா துஸ்ஸா இயக்க உள்ள இந்த படம் ஒரே ஷாட்டில் சைக்காலஜி த்ரில்லர் கதை களத்தில் உருவாக உள்ளது. 105 நிமிடம் இடைவிடாமல் ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் இந்த படத்திற்கு "105 மினிட்ஸ்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் போஸ்டரை இப்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. "105 மினிட்ஸ்" ஒரே ஷாட்டில் எடுப்பதால் இதில் எந்த ஒரு கட்சியும் எடிட் செய்யப்படாது என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X