தனுஷூடன் மீண்டும் இணையும் ஹன்சிகா.. தீயாய் பரவும் செய்தி !
சென்னை : தனுஷுடன் ஹன்சிகா மோத்வானி மீண்டும் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது.
அசுரன் திரைப்படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தற்பொழுது புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

தனுஷின் புகழை ஓங்கி ஒலிக்க
படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி தமிழ் திரைத்துறையை அதிரவைத்து வரும் நடிகர் தனுஷ், தற்பொழுது இந்திய அளவில் உற்று நோக்கப்படும் தமிழ் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், அசுரன் திரைப்படத்தின் வெற்றி தனுஷின் புகழை ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளது.

ஜகமே தந்திரம்
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் தொடர்ந்து நடித்து கலக்கி வரும் தனுஷ் தமிழில் தற்பொழுது பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் "ஜகமே தந்திரம்" திரைப்படம் அனைத்து வேலைகளும் முடிந்து தற்பொழுது வெளியீட்டிற்காக காத்திருக்கின்ற நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் "கர்ணன்" திரைப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில்
தனுஷ் பணியாற்றும் ஒவ்வொரு படத்திற்கான எதிர்பார்ப்பு பலரையும் புருவம் தூக்க வைத்துள்ள நிலையில், தற்பொழுது இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார், லாக்டவுன் முடிந்தவுடன் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் உலா வருகிறது.

தனுஷுக்கு ஜோடியாக
ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஹன்சிகா மோத்வானி முதன்முதலில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். மாப்பிள்ளை திரைப்படத்திற்குப் பிறகு தனுஷுடன் இணைந்து எந்த படத்திலும் ஹன்சிகா பணியாற்றாமல் இருந்த நிலையில் தற்பொழுது மித்ரன் ஜவஹர் இயக்கும் இந்த புதிய திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் மிக வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

கதாநாயகியாக நடிக்க உள்ளார்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், மித்ரன் ஜவஹர் இயக்கும் இந்த படத்தில் யார் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

அதிகாரப்பூர்வ தகவல்
ஹன்சிகா மோத்வானி மற்றும் தனுஷ் இணைந்து நடித்த மாப்பிள்ளை திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில் அதற்கு பின் இவர்கள் இருவரும் வேறு எந்த படத்திலும் சேர்ந்து நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த ஜோடி இணைந்து ஒரு படத்தில் நடித்தால் மிக நன்றாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்களும், இவர்களின் ரசிகர்களும் மிக ஆவலுடன் அதிகாரப்பூர்வ தகவலை எதிர்பார்த்து காத்திருக்கின்றது. மேலும் இயக்குனர் மித்ரன் ஜவஹர் தனுஷ் நடிப்பில் யாரடி நீ மோகினி, உத்தம வில்லன், குட்டி போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த திரைப்படங்கள்
தனுஷ் தற்பொழுது நடித்து வரும் ஜகமே தந்திரம், கர்ணன் திரைப்படங்களை தொடர்ந்து, கார்த்திக் நரேன், வெற்றிமாறன் மற்றும் செல்வராகவன் போன்றோரின் இயக்கத்தில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications