தடபுடலாக நடந்த ஹன்சிகா திருமணம்..நெற்றியில் குங்குமம் வைக்கும் போது ஆனந்த கண்ணீர் வடித்தார்!

ஜெய்ப்பூர் : நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் நேற்று ஜெய்ப்பூர் அரண்மனையில் தடபுடலாக நடைபெற்றது.

வெண்ணையில் செய்த சிலை போல அம்சமாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் குழந்தை நட்சத்திரமாக இந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் மாப்பிள்ளை படத்தில் தமிழ் ஆடியன்சுக்கு பரீச்சயம் ஆனார்.

அதைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து இளசுகள் மனதில் இடம் பிடித்தார். கொழு கொழுனு இருந்த ஹன்சிகாவை ரசிகர் சின்ன குஷ்பு என செல்லமாக அழைத்து வந்தனர்.

ஹன்சிகா மோத்வானி திருமணம்

ஹன்சிகா மோத்வானி திருமணம்

படங்களில் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடக்க இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியான நிலையில், காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் முன் தனது நீண்ட நாள் நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக போட்டோவை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு அறிவித்தார்.

மெஹந்தி விழா

மெஹந்தி விழா

ஹன்சிகா மற்றும் சோஹேல் திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனை வண்ணவிளக்குகள், அலங்கார தோரணங்களுடன் ஜெய்ப்பூர் அரண்மனை ஜொலித்தது. மெஹந்தி விழாவுடன் திருமணத்திற்கு முந்தைய விழா ஆரம்பமானது கையில் மருதாணியுடன், சிவப்பு நிற உடையில் வெட்கம் கலந்த முகத்துடன் ஹன்சிகா போஸ் கொடுத்திருந்தார்.

மணக்கோலத்தில்

மணக்கோலத்தில்

இதன்பின் நடந்த இசை கச்சேரியில், மணக்கோலத்தில் நடிகை ஹன்சிகா-சோஹேல் கதுரியா காணப்பட்டனர். அதில் இஸ்லாமிய முறைப்படி ஹன்சிகா தங்க நிற உடையில் மினுமினுத்தார். மணமகள் உடையில் ஹன்சிகா, சோஹேல் கதுரியாவுடன் நடந்து வந்தார். பின்னர் இசைக்கு ஏற்ப உற்சாகத்துடன் ஹன்சிகா நடனமாடினார்.

சிந்தி பாரம்பரிய முறையில் திருமணம்

சிந்தி பாரம்பரிய முறையில் திருமணம்

இதையடுத்து, ஹன்சிகா மோத்வானியை சோஹேல் கதுரியா சிந்தி பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டார். நடிகை ஹன்சிகா திருமணத்திற்காக சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்தார். அதே போல சோஹேலும் தங்க நிறத்தில் ஷெர்வானி அணிந்திருந்தார். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் வெளியாகி பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நெற்றியில் குங்குமம்

நெற்றியில் குங்குமம்

திருமண விழாவில் முக்கியமான சடங்கான நெற்றியில் குங்குமம் வைக்கும் சடங்கின் போது, மகிழ்ச்சியில் ஹன்சிகா ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். இவர்களின் திருமணம் நடைபெறும் போது வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஹன்சிகாவும் சோஹேலும் கணவன் மனைவியாக திருமண பந்தத்தில் இணைந்து கைகளை பிடித்தபடி இருந்தனர்.

திருமண ஒளிபரப்பு உரிமை

திருமண ஒளிபரப்பு உரிமை

தடபுடலாக நடந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஹன்சிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திருமணத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை குறிப்பிட்ட சில முக்கிய பிரபலங்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களது திருமண ஒளிப்பரப்பு உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X