Don't Miss!
- Technology
பிப்., 4 உறுதி: காத்திருந்தது போதும்.. சேமித்த காசுக்கு தகுதியான ஒரு 5ஜி போன் வாங்கலாம்!
- News
உடம்பு சரியில்லை! மாவட்டச் செயலாளர் பதவி வேண்டாம்! டிடிவிக்கு ஷாக் தந்த திண்டுக்கல் ராமுத்தேவர்!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Finance
ஊழியர்களை ஏன் பணி நீக்கம் செய்யுறீங்க..அப்படி செய்யாதீங்க.. அஷ்னீர் குரோவரின் பரிந்துரைய பாருங்க!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 2,11,20 மற்றும் 29 இதுல ஒன்னா? அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக..ஹனிமூன் எப்போ? வெட்கப்பட்ட ஹன்சிகா!
மும்பை : மும்பை விமான நிலையத்தில் காதல் கணவருடன் கைகளை கோர்த்து நடந்து வந்த ஹன்சிகாவிடம் ஹனிமூன் எப்போது என கேட்டு செய்தியாளர்கள் அவரை வெட்கப்பட வைத்துள்ளனர்.
ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் திருமணம் சிந்தி முறைப்படி தடபுடலாக கடந்த 4ந் தேதி நடந்து முடிந்தது.
இவர்களின் திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனை வண்ணவிளக்குகள், அலங்கார தோரணங்களுடன் ஜொலித்தது.
ஹன்சிகாவிடம்
கூட
என்னைதான்
புரபோஸ்
செய்ய
சொன்னார்...
உதயநிதி
பற்றி
சந்தானம்

நடிகை ஹன்சிகா மோத்வானி
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்டநாள் நண்பரான சோஹேலை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தது முதலே ஒட்டுமொத்த மீடியாவின் பார்வையும் இவர்கள் மீது விழுந்தன. மெஹந்தி விழாவுடன் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் தொடங்கின. இசை கச்சேரி, வரவேற்பு நிகழ்ச்சி என ஜெய்ப்பூரே சும்மா அதிர்ந்தது எனலாம்.

சிந்தி முறையில் திருமணம்
இதையடுத்து, ஹன்சிகா மோத்வானியை சோஹேல் கதுரியா சிந்தி பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டார். நடிகை ஹன்சிகா திருமணத்திற்காக சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்தார். அதே போல சோஹேலும் தங்க நிறத்தில் ஷெர்வானி அணிந்திருந்தார். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிராண்டானது.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை
திருமண விழாவில் முக்கியமான சடங்கான நெற்றியில் குங்குமம் வைக்கும் சடங்கின் போது, மகிழ்ச்சியில் ஹன்சிகா ஆனந்த கண்ணீர் வடித்தார். தடபுடலாக நடந்த திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை குறிப்பிட்ட சில முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் யார் யார் கலந்து கொண்டார்கள் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. நெருங்கிய நண்பர்களுடன் ஹன்சிகா இருக்கும் புகைப்படம் மட்டுமே வெளியானது.

உன் கைகள் கோர்த்து
இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு ஹன்சிகா மோத்வானி தனது காதல் கணவர் சோஹேல் கதுரியாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இளம் ஜோடியை சுற்றி வளைத்துக்கொண்ட செய்தியாளர்கள் ஹனிமூன் எங்கே என கேட்டுள்ளனர். அந்த கேள்வியை கேட்டதும், புது பெண் ஹன்சிகாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

இப்போதைக்கு ஹனிமூன் இல்லை
ஹன்சிகா மோத்வானி ஒரு பெரிய நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதால், அந்த விளம்பரத்திற்காக டெல்லி செல்ல இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து வேறு சில படங்களின் படப்பிடிப்புகளில் அவர் கமிட்டாகி உள்ளதால், அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.