செலபிரிட்டியா இருந்ததற்கு நான் கொடுத்த விலை.. ஓடிடியில் வெளியான திருமண வீடியோ.. கண்கலங்கிய ஹன்சிகா!

சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

படங்களில் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானிக நீண்ட நாள் நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த ஜெய்ப்பூர் அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஹன்சிகாவின் திருமண

ஹன்சிகாவின் திருமண

ஹன்சிகாவின் திருமண ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டார் பெற்றிருந்ததால், திருமணம் குறித்த ஒரு சில வீடியோக்கள் மட்டுமே வெளியானது. இந்த திருமண விழாவில் எந்தந்த பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் என்ற எந்த விவரமும் வெளியாகாததால், ரசிகர்கள் இவர்களின் திருமண வீடியோவை காண ஆவலுடன் இருந்தனர்.

திருமண ஏற்பாடு

திருமண ஏற்பாடு

இதையடுத்து, ஹன்சிகா மோத்வானியின் திருமண வீடியோ இன்று வெளியாகி உள்ளது. அதில், ஹன்சிகா திருமண ஏற்பாடு குறித்து பேசினார். திருமண மண்டப அலங்காரம், மெஹந்தி, சங்கீத், மஞ்சள் சடங்குக்கான ஏற்பாடு, வரவேற்பு நிகழ்ச்சியில் எப்படி நடனமாடுவது, திருமணத்திற்கான உடை, அலங்காரம், மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

காட்டுத்தீ போல திருமண செய்தி

காட்டுத்தீ போல திருமண செய்தி

மேலும்,அந்த வீடியோவில் திருமணம் குறித்த செய்தி காட்டுத் தீ போல பரவியதால் நான் மிகவும் வருத்தப்பட்டேன், மேலும், சோஹேலின் வேலை குறித்தும், அவருக்கு ஏற்கனவே திருமணமானது குறித்தும் பல தகவல்கள் பரவியது. எனது திருமணத்தை விட, எனது திருமணம் குறித்து வெளியான செய்திதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

மனம் வருந்தினேன்

மனம் வருந்தினேன்

எப்போது எல்லாம் நான் மன அழுத்தமாக இருக்கேனோ அப்போது எல்லாம், நான் முதலில் போஃன் செய்வது சோஹேலுக்கு தான். அன்றும் நான் மன அழுத்ததில் இருந்ததால், அவருக்கு போஃன் செய்தேன். அதற்கு அவர் இந்த பிரச்சனையை சேர்ந்து சமாளிக்கலாம் என்றார். நாங்கள் இருவரும் தம்பதி என்பதைவிட இருவரும் பெஸ்ட் பிரண்டாக இருந்து இருக்கிறோம். அதை போல காதலிலும் கவனமாக இருந்தோம்.

நான் கொடுத்த விலை இதுதான்

நான் கொடுத்த விலை இதுதான்

பத்திரிக்கையில் பல செய்திகள் வந்தால், நானும் சோஹேலும் எடுத்துக்கொண்டே நிச்சயதார்த்த போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்தேன். பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் அதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது அதன் பிறகு சோஹேலின் முதல் திருமணம் முறிந்ததற்கு நான், தான் காரணம் என்று எழுதினார்கள். நான் அப்படியே உடைந்துவிட்டேன். செலபிரிட்டியா இருந்ததற்கு நான் கொடுத்த விலை இதுதான் என்றார்.

கண்கலங்கிய ஹன்சிகா

கண்கலங்கிய ஹன்சிகா

சோஹைல் கத்தூரியாவின் கடந்த காலத்தை பற்றியெல்லாம் எனக்கு கவலைப்படவில்லை, நான் அவரை மனதார ஏற்றுக்கொண்டேன், நாங்களும் மனுஷங்க தான் எங்களுக்கும் உணர்வுகள் இருக்கு கையில் பேப்பரும் பேனாவும் இருந்தால், யார் எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாமா? என கண்ணீருடன் ஹன்சிகா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

அம்மா தான் எனக்கு எல்லாம்

அம்மா தான் எனக்கு எல்லாம்

என்னுடைய முதுகு எலும்பே என் அம்மா நான், அவங்க இளமையாக இருக்கும் போதே தனியாக ஆகிவிட்டார்கள். அவர்கள் நினைத்து இருந்தால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இருக்கலாம். ஆனால், எங்களுக்காகவே வாழ்ந்தார்கள். என்னுடைய எல்லா வெற்றியும் என்னுடைய அம்மா மோனாவுக்குத்தான் அனைத்து பெருமையும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X