பிறந்தநாள் ட்ரீட் கொடுக்க தயாராகும் ஹன்சிகா…!

ஹன்சிகா தன்னுடைய பிறந்தநாளன்று 50வது படத்தின் அறிவிப்பை வெளியிட உள்ளார்.

சென்னை: நடிகை ஹன்சிகா தன்னுடைய 50வது படத்தின் அறிவிப்பை பிறந்தநாளன்று அறிவிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடா என நடித்து வருபவர் ஹன்சிகா. கடைசியாக பிரபுதேவாவுடன் குலேபகாவலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்போது, பி ஹேப்பி பிந்தாஸ் என்ற கன்னட திரைப்படமும், மாப்பிள்ளை திரைப்பட மொழிமாற்று இந்தி படமான ஜமாய் ராஜாவும் வெளியாக இருக்கின்றன.

இந்த நிலையில், தன்னுடைய ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு தன் பிறந்தநாளான ஆக்ஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என ஹன்சிகா ட்வீட் செய்துள்ளார்.

தொலைக்காட்சி

தொலைக்காட்சி

1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி மும்பையில் பிறந்த ஹன்சிகா, ஷகலக பூம் பூம் என்ற மாயாஜாலத் தொடரின் மூலம் அறிமுகமானார். மற்றுமொரு இந்தி தொடருக்குப் பிறகு, ரித்திக் ரோஷனின் கோய் மில் கயா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றினார்.

16 வயதினிலே

16 வயதினிலே

இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும், தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார். தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கிய தேசமுடுரு திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியானார். இத்திரைப்படத்தில் அறிமுகமானபோது ஹன்ஸுக்கு வயது 16. தெலுங்கில் அறிமுகமான ஹன்சிகா அதே ஆண்டில் பாலிவுட் சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.

சுராஜ்

சுராஜ்

பாலிவுட் டோலிவுட் என்று சுற்றிய ஹன்சிகாவை தமிழுக்கு அழைத்து வந்தவர் இயக்குனர் சுராஜ். 2011 ஆம் ஆண்டு ரிலீஸான மாப்பிள்ளை திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தார். அதன்பிறகு தொட்டதெல்லாம் பொன்னாகும் பட்டதெல்லாம் பளிச்சிடும் என்பதுபோல், பல படங்கள் ஹிட் அடிக்க ஆரம்பித்தன. தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பு என பெயர் பெற்றார்.

ஹன்சிகா ஜோடி

ஹன்சிகா ஜோடி

ஒரு படம் வெற்றி பெற்றால் ராசியான ஹீரோயின், மங்களகரமான மகராசி என தமிழ் சினிமா கொண்டாடிவிடும். அதனால் அடுத்தடுத்து சூர்யா, ஆர்யா, தனுஷ், விஷால், சித்தார்த், சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என்று எல்லா நடிகர்களுடனும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டார்.

தனுஷ்

தனுஷ்

மற்ற மொழி படங்களில் நடித்திருந்தாலும், அதிகமான படங்கள் தமிழில் தான் நடித்துள்ளார். இப்போது துப்பாக்கி முனை, 100 ஆகிய படங்களில் நடித்து வரும் ஹன்சிகாவின் ஐம்பதாவது திரைப்பட அறிவிப்பை அவருடைய முதல் தமிழ்ப் பட ஹீரோவான தனுஷ் வெளியிட உள்ளார். இது ஹன்சிகாவின் சென்டிமென்ட் டச் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X