Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சிம்பு- ஹன்சிகா மோத்வானியின் ‘மஹா‘ அப்டேட்…குஷியில் ரசிகர்கள் !
சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மஹா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள மஹா என்ற படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் என்பவர் தயாரித்துள்ளார்.
'ரோமியோ ஜூலியட்' படத்தின் இயக்குநர் லக்ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய யு.ஆர்.ஜமீல் இப்படத்தை இயக்கி உள்ளார்.
நயன்தாராவை ஹக் பண்ண அனிருத்.. விக்கி - நயனை மகனுடன் வந்து வாழ்த்திய ஏ.ஆர். ரஹ்மான்.. செம க்ளிக்ஸ்!
மஹா
நாயகியை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ஹன்சிகா லீட் ரோலில் நடத்துள்ளார். இது ஹன்சிகாவின் 50வது திரைப்படமாகும். இதில், ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு பல பிரச்சனைகளால் படம் வெளியாகவில்லை.
சிம்பு கேஸ்ட்ரோலில்
இப்படத்தில் சிம்புவிடம் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கேட்டபோது ஹன்சிகாவுடனாக மோதலை மறந்து சிம்பு நடிக்க சம்பதித்தார். மேலும், இப்படத்தின் மீது அவர் காட்டிய ஆர்வத்தால், அவருக்காக மஹா படத்தில் தனியாக ஒரு பாடல் காட்சி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
கதை
விமானப் பெண்ணாக இருக்கும் ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறது. குழந்தையை கொன்றது யார் என்பதை கதாநாயகி ஹன்சிகா கண்டுபிடிப்பது தான் கதை. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Recommended Video
ரிலீஸ் தேதி
மஹா திரைப்படம் கடந்த ஜூலை 22ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மஹா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், ஹன்சிகா மேத்வானி, மஹா திரைப்படத்தை அடுத்து 105 மினிட்ஸ், மை நேம் இஸ் ஸ்ருதி, பார்ட்னர் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.