ரவுடி கெட்டப்பில் ஹன்சிகா.. வாயடைத்துப்போன ரசிகர்கள் !

மும்பை : நானும் ரவுடி தான் என லோக்கலாக இறங்கிய ஹன்சிகா மோத்வானியை பார்த்து ரசிகர்கள் பலரும் வாயடைத்துப் போய் உள்ளனர்.

Recommended Video

Simbu Marriage with London Girl | Maanadu, Maha, #STR wife

சிம்புவுடன் மஹா திரைப்படத்தில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி தற்பொழுது பதிவிட்டுள்ள இந்த ரவுடி புகைப்படத்தை பார்த்து இது என்ன அடுத்த படத்தோட கெட்டப்பா என பலரும் கேட்டு வருகின்றனர்.

எப்போதும் வித்தியாசமான புகைப்படங்களை பதிவிட்டு ஒரு ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் வெளியிட்ட பொட்டேட்டோ சிப்ஸ் புகைப்படத்தை தொடர்ந்து இப்பொழுது ராவான ரவுடி கெட்டப்பில் வந்து அனைவரையும் மிரட்டி வருகிறார்.

முன்னணி கதாநாயகர்களுடன்

முன்னணி கதாநாயகர்களுடன்

தமிழ் சினிமாவில் பப்ளி ஹீரோயினாக பல கோடி ரசிகர்களின் அன்போடு வெற்றி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி விஜய், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வருகிறார்.

மலையாளத்தில் அறிமுகம்

மலையாளத்தில் அறிமுகம்

தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா மலையாளத்தில் விஷால், மோகன்லால் நடிப்பில் மிரட்டலாக வெளியான "வில்லன்" திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்து மலையாள திரையுலகில் தனது காலடியை பதித்தார்.

அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட்

அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட்

தமிழில் மாப்பிள்ளை திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று வரை தொடர்ந்து அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களையும் பல்வேறு விருதுகளையும் வென்று மிகச் சிறந்த நடிகையாக தனது க்யூட்டா நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் இவர் தற்பொழுது பல்வேறு வித்தியாசமான புகைப்படங்களின் மூலமும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

முக்கியமான காட்சியில்

முக்கியமான காட்சியில்

புதுமுக இயக்குனர் யு.ஆர் ஜமீல் இயக்கிவரும் "மஹா"திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி பல ஆண்டுகளுக்குப் பிறகு சிம்புவுடன் இந்த படத்தில் ஒரு சில முக்கியமான காட்சியில் நடித்துள்ளார். ஹன்சிகா, ஸ்ரீகாந்த், சிம்பு என மிகப் பிரபலமான நடிகர்கள் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வரும் வேளையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரானா பொது முடக்கம் காரணமாக தற்போது பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரவுடி கெட்டப்பில்

ரவுடி கெட்டப்பில்

எனினும் தனது ரசிகர்களை தொடர்ந்து சமூக வலைதளங்களின் மூலம் குஷிப்படுத்தி வரும் ஹன்சிகா தனது வித்தியாசமான புகைப்படங்களை விதவிதமான கோணங்களில் எடுத்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட பொட்டேட்டோ சிப்ஸ் உடை மிகப் பிரபலமாக வைரலான நிலையில் தற்பொழுது அதற்கு ஒரு படி மேலே போய் ரவுடி கெட்டப்பில் கெத்து காட்டி வருகிறார்.

செம கெத்தாக

செம கெத்தாக

கருப்பு நிற முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு முன்னழகை காட்டியவாறு கழுத்தில் கர்சிப் கட்டிக்கொண்டு, கருப்பு நிற கூலிங் கிளாஸ் உடன் நானும் ரவுடிதான் என ரவுடி கெட்டப்பில் செம கெத்தாக பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாயடைத்துப் போய் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X