அட்டகாசமான நடிப்பு..நண்பர் சிம்புக்கு நன்றி.. ஹன்சிகா மோத்வானி நெகிழ்ச்சி!

சென்னை : நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள மஹா படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.

இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரித்துள்ளார். ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குநர் லக்ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய யு.ஆர்.ஜமீல் இப்படத்தை இயக்கி உள்ளார்.

நாயகியை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ஹன்சிகா லீட் ரோலில் நடத்துள்ளார். சிம்பு, ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மஹா

மஹா

சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள இப்படத்தில்,விமானப் பெண்ணாக இருக்கும் ஹன்சிகா, பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறது. குழந்தையை கொன்றது யார் என்பதை கதாநாயகி ஹன்சிகா கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரொம்ப ஸ்பெஷல்

ரொம்ப ஸ்பெஷல்

இப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஹன்சிகா, என்னுடைய 50வது படமாக மஹா திரைப்படம் அமைந்த மகிழ்ச்சியானது. அப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகும். நான் முதன்முறையாக அம்மாவாக இந்தபடத்தில் நடித்திருக்கும் படம் என்பதால் இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.

நண்பர் சிம்புக்கு நன்றி

நண்பர் சிம்புக்கு நன்றி

படத்தில் நடித்த அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். மஹா சிறப்பான படமாக உருவாக முக்கிய காரணம் சிம்பு, இப்படத்தில் அவர் 40 நிமிடங்கள் வருவார். இந்த ரோலில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால், அவரிடம் கேட்டேன் அவர் எந்தவிதமான தயக்கமும் இன்றி, நடித்து கொடுத்தார். நண்பர் சிம்புவிற்கு நன்றி. அவருக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது என்றார்.

மறக்கவே முடியாது படம்

மறக்கவே முடியாது படம்

தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளத்தில் நடித்தாலும் தமிழ் சினிமா எனக்கு ரொம்பவே ஸ்பெஷல், ஒரு கல் ஒரு கண்ணடி, எங்கேயும் காதல்,வேலாயுதம், ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடித்த படம் இந்தபடங்களில் நடித்ததை என்னையும் என்னால் மறக்கவே முடியாது. தற்போது, இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு படத்தில் நடித்து வருகிறேன் என்றார்.

வெற்றிக்கு காரணம்

வெற்றிக்கு காரணம்

நடிப்பையும் சினிமாவையும் நான் உயிருக்கும் மேலாக காதலிக்கிறேன். விரைவில் நான் நடித்த 60வது திரைப்படம் வெளியாக உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 60 படங்களுக்கு மேல் நான் நடித்திருக்றேன் என்றால், அதற்கு காரணம் என் அம்மா தான். அவர்கள் என் வாழ்க்கையின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். அவரால் தான் இந்த நிலைக்கு வந்தேன். இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று அந்த பேட்டியில் ஹன்சிகா கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X