ஹன்சிகாவுக்கு திருமணம்..தடபுடலாக தயாராகும் ஜெய்ப்பூர் அரண்மனை..அட மாப்பிள்ளை யாருப்பா?

சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு விரைவில் திருமணம் நடைப்பெற உள்ளதாகவும், அதற்காக ஜெய்ப்பூர் அரண்மனை தயாராகி உள்ளதாகவும் இணையத்தில் தகவல் கசிந்து வருகிறது.

இந்த தகவல் உண்மையா பொய்யா என்று தெரியவில்லை அதற்குள், ஹன்சிகா பேன்ஸ் என்னது செல்லத்துக்கு கல்யாணமா என சோககீதம் பாடத் தொடங்கி விட்டனர்.

ஒரு வழியாக நடிகர் சிம்பு காதலிப்பதாக கிசுகிசுவில் சிக்கிய பெண்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாகி கொண்டிருக்கிறார்கள்.

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

எங்கேயும் எப்போதும் காதல் படத்தில் கொழுக்கு மொழுக்குனு இருந்த ஹன்சிகாவை பார்த்ததும் மொத்த தமிழ் ரசிகர்களும் அவுட்டாகிவிட்டனர். யாருடா இந்த பொண்ணு சும்மா கும்முனு இருங்காங்களே என்று சின்ன குஷ்பூ என பெயர் வைத்து அழகே...அழேகே அழகின் அழகே நீயடி என கவிதைபாட ஆரம்பித்துவிட்டனர்.

சின்ன குஷ்பு

சின்ன குஷ்பு

நம்ம ஊருக்கு வந்த சின்ன குஷ்பு, உதயநிதியுடன் ஒருகல் ஒருகண்ணாடி, தனுஷூடன் மாப்பிள்ளை, விஜய்யுடன் வேலாயுதம், சிம்புவுடன் வால் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். சிம்புவுடன் வால் படத்தில் நடிக்கும் போது அவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. வழக்கமா சிம்பு யாருடன் இணைந்து நடித்தாலும் இதே கிசுகிசுத்தான் வரும் என்பதால் ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லை.

ஜெய்பூர் அரண்மனையில்

ஜெய்பூர் அரண்மனையில்

இந்நிலையில், நடிகை ஹன்சிகாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இதற்காக புகழ்பெற்ற 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அதிக பொருட்செலவில் நடத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

மாப்பிள்ளை யார்?

மாப்பிள்ளை யார்?

திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று சொல்லப்பட்டாலும், எந்த நாளில் நடைபெறும் திருமணத்திற்கான ஏற்பாடு என்ன என்பது குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை. அதே போல மாப்பிள்ளை பெரிய தொழிலதிபர் என்ற தகவலைத்தவிர வேறு எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியமாக வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

கைவசம் உள்ள படம்

கைவசம் உள்ள படம்

ஹன்சிகாவின் 50ஆவது திரைப்படமான 'மகா' சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது நடிப்பில் பார்ட்னர், 105 நிமிடங்கள், என் பெயர் ஸ்ருதி ஆகிய படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. மேலும், பெயரிடப்படாத 3 திரைப்படங்களில் ஹன்சிகா நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X