Don't Miss!
- News
என்ன ராமலிங்கம் எப்படி இருக்க? கொரோனா பரோல் முடிந்து சிறை திரும்பாத கைதிகள்! சாட்டையை சுற்றிய போலீஸ்
- Finance
எல் ஐ சி-யின் புதிய ஜீவன் ஆசாத் திட்டம்.. ரூ.5 லட்சம் பெற என்ன செய்யணும்?
- Lifestyle
பெண்களே! உங்க முகத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சினை வருமாம்...!
- Sports
ஐசிசி-ன் உச்சகட்ட விருதுகள்.. 3 இந்திய வீரர்கள் கவுரவிப்பு.. விராட் கோலியின் மாஸ் கம்பேக் - விவரம்!
- Technology
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Automobiles
2கே கிட்டிகளை குறி வைக்கும் யமஹா! ஆர்எக்ஸ் 100 பைக்கை மீண்டும் களத்தில் இறக்கி பெரிய சம்பவத்தைப் பண்ண போறாங்க
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
Hansika Wedding: ஜெய்ப்பூர் அரண்மனையே குலுங்க.. பிரம்மாண்டமாக நடைபெற்ற ஹன்சிகா திருமணம்!
ஜெய்ப்பூர்: நடிகை ஹன்சிகா தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் பிசினஸ் பார்ட்னரான சோஹேல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 3 நாட்களாக நடிகை ஹன்சிகாவின் திருமண வைபவங்கள் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா அரண்மனையில் நடைபெற்று வந்த நிலையில், டிசம்பர் 4ம் தேதி மாலை ஹன்சிகாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில், மணமக்கள் இருவரும் ராயல் உடையில் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
திருமண
நாளில்
ஹன்சிகா
செய்த
நல்ல
காரியம்..ஆதரவற்றவர்களுக்கு
விருந்து!

ஹன்சிகா திருமணம்
ஐ லவ் யூ ரஸ்னா என சிறு வயதிலேயே கேமரா முன்பாக நடித்த நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தியவர். டிசம்பர் 4ம் தேதி தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் #HansikaMotwani என்கிற ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகின்றன.

அரண்மனையில் பிரம்மாண்டமாக
ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோட்டா அரண்மனையில் நடிகை ஹன்சிகா - சோஹேல் கத்தூரியாவின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இந்த திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

3 நாள் கொண்டாட்டம்
சுஃபி, மெஹந்தி, சங்கீத் மற்றும் திருமணம் என தொடர்ந்து 3 நாட்களாக நடிகை ஹன்சிகாவின் ப்ரி வெட்டிங் செரிமோனிகள் களைகட்டின. அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. மணமக்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கைகளில் மருதாணி
3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன. வியாழனன்று நடைபெற்ற மெஹந்தி ஃபங்ஷன் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தின. மருதாணி சிவந்த கையுடன் ஹன்சிகா அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

ப்ரீ வெட்டிங் செரிமோனி
முன்னதாக துர்கா பூஜை நடத்திய மணமக்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு சுஃபி எனும் திருமணத்திற்கு முந்தைய சடங்கில் கலந்து கொண்டனர். ராயல் உடையில், உடல் முழுக்க நகைகளுடன் நடிகை ஹன்சிகா மோத்வானி நடந்து வரும் வீடியோ காட்சியை மாப்பிள்ளை சோஹேல் கத்தூரியாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இன்று இரவு சங்கீத் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம்.

இரண்டாவது திருமண சர்ச்சை
6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொழிலதிபர் சோஹேல் கத்தூரியாவுக்கு ஹன்சிகாவின் தோழிக்கும் திருமணம் நடைபெற்று விட்டது. நடிகை ஹன்சிகாவே அந்த திருமணத்தில் ஆட்டம் போட்டு இருந்தார். ஆனால், சோஹேல் கத்தூரியா தனது மனைவியை பிரிந்து வாடிய நிலையில், ஹன்சிகாவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக இருவரும் பல ஆண்டுகள் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டனர் என்கிற சர்ச்சைகளும் ஹன்சிகா திருமண அறிவிப்பை வெளியிட்டதும் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் ரிலீஸ்
நடிகை நயன்தாராவின் திருமண நிகழ்ச்சி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவித்து பல மாதங்கள் ஆகியும் இன்னமும் வெளியாகவில்லை. ஆனால், நடிகை ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சி இந்த மாதமே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.