நாத்தனாரை டார்ச்சர் செய்த ஹன்சிகா.. 4 பிரிவுகளில் வழக்கு.. இதெல்லாம் ஒரு பொழப்பா? நெட்டிசன்ஸ் கேள்வி!
சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானியின் அண்ணி, மும்பை அம்போலி காவல் நிலையத்தில் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளார். தன்னை கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தினமும் டார்ச்சர் செய்து வருவதாகவும் தன்னையும் தனது கணவரையும் பிரித்து வைத்திருப்பதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் படத்திலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்த ஹன்சிகா.தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான போது கொழு கொழுவென இருந்தார். ரசிகர்கள் இவரை சின்ன குஷ்பூ என பாசத்தோடு அழைத்து வந்தனர். எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் நடித்தார். வாலு படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடித்த போது இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது.

மும்பையில் செட்டில்: ஒரு கட்டத்தில் ஹன்சிகாவிற்கு படவாய்ப்பே இல்லாமல் போனது. இதற்கு காரணம் தனது உடம்பு தான் என நினைத்த ஹன்சிகா கடுமையாக வொர்க் அவுட் செய்து எலும்பும் தோலுமாக மாறினார். ஆனால், அதன் பிறகும் பட வாய்ப்பு வரவில்லை. இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த ஹன்சிகா தனது சிறுவயது நண்பர் சோஹெல் கத்தூரியாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகாவின் நடிப்பில் கடைசியாக கார்டியன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஒன்னுக்கும் உதவாமல் தோல்வி திரைப்படமானது.

டார்ச்சர் செய்தார்: இந்நிலையில், ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியின் மனைவி முஸ்கான் நான்சி மும்பை அம்போலி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது அம்மா மோனா மோத்வானி ஆகியோர் தனது கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் டார்ச்சர் கொடுத்து வருவதாக கூறியுள்ளார். எனக்கும் என் கணவருக்கும் 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான இரண்டே ஆண்டில் அதாவது 2022ல் இருந்தே அவர்கள் என்னை கொடுமைப்படுத்தினார்கள். இதன் காரணமாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

4 பிரிவுகளில் வழக்கு: இருவரும் விவகாரத்து வழக்கு பெற முயற்சி செய்தோம், அப்போது என் கணவர் பிரசாந்த் என்னுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தார். ஆனால், ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது அம்மா ஆகியோர் எங்கள் குடும்ப விஷயத்தில் தலையிட்டு, எங்கள் இருவரையும் பிரித்து வைக்க பார்க்கிறார்கள். நாங்கள் இருவரும் சேர்த்து வாழ்வதில் அவர்களுக்கு விருப்பமே இல்லை என்று அந்த புகார் மனுவில் முஸ்கான் நான்சி பதிவிட்டுள்ளார். இந்த புகாரை ஏற்றுகொண்ட போலீசார், ஹன்சிகா மற்றும் அவரது அம்மா மோனா மோத்வானி மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

ஹன்சிகா மோத்வானி மீது நாத்தனார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கும் செய்தி இணையத்தில் காட்டுத்தீபோல பரவியதை அடுத்து, இணைவாசிகள் எதற்கு இந்த பொழப்பு என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











