சிம்புவை எனக்கு காதலர் ஆக்குங்களேன்: இயக்குநரிடம் பரிந்துரைத்த ஹன்சிகா
Recommended Video
சென்னை:ஹன்சிகா சொல்லித் தான் சிம்புவை மஹா படத்தில் நடிக்க வைத்துள்ளார்களாம்.
வாலு படத்தில் நடித்தபோது சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்தது அனைவருக்கும் தெரியும். சிம்புவை பிரிந்துவிட்டாலும் ஹன்சிகா அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார்.
அதே போன்று சிம்புவும் ஹன்சிகா மீது மதிப்பு வைத்துள்ளார்.

மஹா
ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் மஹா படத்தில் சிம்பு கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் சிம்பு ஹன்சிகாவின் காதலராக நடிக்கிறார். முன்னாள் காதலர்களை காதலர்களாக நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.

சிம்பு
தன் காதலர் கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க பரிந்துரை செய்ததே ஹன்சிகா தானாம். படப்பிடிப்பு தளத்தில் பழசை எல்லாம் நினைத்து முகத்தை திருப்பிக் கொள்ளாமல் சிம்புவும், ஹன்சிகாவும் நட்புடன் பழகுகிறார்களாம். ஹன்சிகாவும், சிம்புவும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் விதம் பாராட்டுக்குரியது.

பாராட்டு
படப்பிடிப்பு துவங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே சிம்பு ஸ்பாட்டுக்கு வந்து படக்குழுவுக்கு உதவி செய்கிறாராம். இயக்குநர் சொல்வதை புரிந்து கொண்டு எதிர்பார்ப்பதை விட அதிகம் கொடுப்பவர் சிம்பு என்கிறார் ஜமீல்.

விமானி
மஹா படத்தில் சிம்பு 30 முதல் 45 நிமிடங்கள் வருவாராம். சிம்பு விமானியாக நடிக்கிறாராம். படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து சிம்பு மிகுந்த அர்ப்பணிப்புடன் நடந்து கொள்வதை பார்த்து படக்குழு இம்பிரஸ் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications











