திருமணம் முடிந்த உடனே ஹன்சிகா வீட்டில் நடந்த சோகம்... டைவர்ஸ் நோட்டீஸ் கொடுத்ததால் பரபரப்பு
மும்பை: நடிகை ஹன்சிகாவுக்கும் அவரது நண்பர் சோஹைல் கதுரியாவுக்கும் டிசம்பர் 3ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இருவரும் ஒன்றாக ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வந்த நிலையில், காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், ஹன்சிகாவின் திருமணம் முடிந்த இரண்டே வாரத்தில் அவரது வீட்டில் நடந்துள்ள சோகமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹன்சிகா திருமணம்
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஹன்சிகா, தற்போது தனது ரியல் ஜோடியுடன் இணைந்துள்ளார். நடிப்பது மட்டுமின்றி ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ஹன்சிகா. அந்நிறுவனத்தில் பிசினஸ் பார்ட்னராக இருந்த சோஹைல் கதுரியா என்பவரை தான் ஹன்சிகா திருமணம் செய்துள்ளார். பிஸினஸ் பார்ட்னராக இருந்த இருவரும், தற்போது ரியல் லைஃபிலும் பார்ட்னராக இணைந்துள்ளனர்.

ஜெய்ப்பூர் அரண்மனையில் செலிப்ரேஷன்
ஹன்சிகாவின் திருமண ஏற்பாடு கடந்த சில வாரங்களாக ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டையிலும் அங்குள்ள அரண்மனையிலும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஹன்சிகா, சோஹைல் கதுரியா இருவரின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் தனது மாமியார் வீட்டுக்குச் சென்ற ஹன்சிகா, குடும்பத்தினருடன் இணைத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டார். அதேநேரம் சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு ஹனிமூன் கிடையாது எனவும் கூறியிருந்தார்.

இரண்டே வாரத்தில் சோகம்
இந்நிலையில், ஹன்சிகாவின் திருமணம் முடிந்த இரண்டே வாரங்களில் அவரது வீட்டில் சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருமண நடந்த போது தன்னுடைய தாய் மற்றும் சகோதரருடன் மட்டுமே ஹன்சிகா புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அதில் அவருடைய அண்ணி இல்லாதது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும் அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம். அதனால் அவர்கள் இருவரும் விவாகரத்து முடிவுக்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதான் காரணமா?
நீண்ட நாட்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. பிரசாந்த் மோத்வானி, முஸ்கான் நான்சி திருமணம் 2021 மார்ச் 21ம் தேதி தான் நடந்துள்ளது. ஆனால், தற்போது அவர்களின் திருமணம் ஒருவருடம் கூட நீடிக்கவில்லை. முஸ்கானுக்கு முகமுடக்கம் இருப்பதால் அவருடைய முக அம்சங்கள் பாதிப்படைந்துள்ளன. அதனால் தான் பிரசாந்த் மோத்வானி அவரை விட்டு பிரிய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹன்சிகா திருமணம் முடிந்த இரண்டே வாரங்களில் அவரது சகோதரர் விவாகரத்து முடிவு எடுத்துள்ளது திரையுலகில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. முஸ்கான் நான்சி சீரியல் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











