புது ஹீரோவை இழுத்துப் பிடித்து 'இச்' வைத்த ஹன்ஸிகா...!
புதுமுக ஹீரோவாக சித்தார்த் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகும் தமிழ்ப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்ஸிகா நடிக்கிறார். படத்தில் முத்தக் காட்சி ஒன்றில் நடிக்க சித்தார்த் ரொம்பவே தயங்கியபோது ஹன்ஸிகாவே முன்வந்து சித்தார்த்துடன் நெருக்கமாக முத்தமிட்டு நடித்துக் கொடுத்தாராம்.
உதடு பொருத்தி முத்தமிடுவது போன்ற காட்சிகள் இப்போது சினிமாக்களில் நீக்க முடியாத காட்சியாகி விட்டது. ஒவ்வொரு படத்திலும் ஒரு மாதிரியான முத்தக் காட்சிகள் இடம் பெறுவது சகஜமாகி விட்டது.
அப்படிப்பட்ட ஒரு காட்சியைத்தான் சித்தார்த் நடித்த தமிழ்ப் படத்தில் வைத்துள்ளனர்.

புதுமுக ஹீரோ
இப்படத்தில் சித்தார்த் என்பவர் நாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு புதுமுகம். தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த ஒருவரது வீட்டு வாரிசாம்.

ஹன்ஸிகாதான் நாயகி
படத்தில் ஹன்ஸிகா மோத்வானிதான் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்துக்காக பல துணிகரமான காட்சிகளில் நடித்துள்ளாராம் ஹன்ஸிகா.

லிப் லாக்
கதைப்படி படத்தில் ஒரு லிப்லாக் காட்சியில் ஹன்ஸிகாவும், சித்தார்த்தும் உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிட வேண்டும். இதற்கு ஹன்ஸிகா தயார் என்று கூறி உதட்டுடன் காத்திருந்தார்.

தயங்கிய சித்தார்த்
ஆனால் நாயகன் சித்தார்த்துக்கு ரொம்பவே தயக்கம். எப்படி ஹன்ஸிகா உதட்டை முத்தமிடுவது என்றுயோசித்துள்ளார். சங்கோஜப்பட்டுள்ளார்.

ஆற்றுப்படுத்திய ஹன்ஸிகா
இதைப் பார்த்த ஹன்ஸிகா, சித்தார்த் அருகே போய் அவரை கூல் படுத்தினாராம். பின்னர் இதெல்லாம் தவறே இல்லை, தயக்கமும் தேவையில்லை என்று அமைதிப்படுத்தி ஆறுதல் கொடுத்தாராம்.

அழகாக கொடுத்தார் இச் இச் இச்
அதன் பின்னர் ஷாட்டுக்கு சித்தார்த் ரெடி என்று ஹன்ஸிகாவே குரல் கொடுக்க ஷாட்டுக்குப் போனார்கள். ஹன்ஸிகாவே முன்வந்து தனது உதடுகளைக் கொடுக்க, சித்தார்த் வைத்தாராம் இச் இச் இச்....

படம் முழுக்க இளமைத் துள்ளல்
இந்த ஒரு காட்சி மட்டுமல்ல, படம் முழுக்க நிறைய இளமைத் துள்ளலுடன் கூடிய காட்சிகள் நிறையவே உள்ளதாம். இதையெல்லாம் முன்கூட்டியே சொல்லித்தான் ஹன்ஸிகாவை புக் செய்தார்களாம்...
படம் முடிவதற்குள் சித்தார்த் பக்கோடாவாகிப் போய் விடுவார் என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications











