1 நிமிஷம் லேட் ஆனாலும் 5 லட்சம் தரணும்... மருமகனிடம் புது டீல் போட்ட ஹன்சிகாவின் தாய்!!

சென்னை : நடிகை ஹன்சிகாவின் அம்மா ஒவ்வொரு நிமிஷத்திற்கும் 5 லட்சம் வேண்டும் என மாப்பிள்ளை வீட்டாரிடம் கண்டிஷன் போட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹன்சிகா மோத்வானியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமை வாய்ந்த அரண்மனையில் கோலாகலமாக நடந்தது.

ஹன்சிகாவின் திருமண ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பெற்றிருந்ததால், திருமணம் குறித்த ஒரு சில வீடியோக்கள் மட்டுமே வெளியானது.

நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமண வீடியோவின் முதல் எபிசோடு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஹன்சிகா திருமண ஏற்பாடு குறித்தும், சோஹேலின் முதல் திருமணம் முறிந்து போனதற்கு ஹன்சிகா தான் காரணம் என பத்திரிக்கைகளில் வெளிவந்தன.

கண்கலங்கிய ஹன்சிகா

கண்கலங்கிய ஹன்சிகா

முதல் எபிசோடில் திருமண வதந்தி குறித்தும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த உடன் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் கண்கலங்கி பேசியிருந்தார். இதையடுத்து இரண்டாவது எபிசோடில், இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்குமே நிச்சயமா ஒரு கடந்த காலம் இருக்கும். ஆனால், அந்த கடந்த கால வாழ்க்கையை பார்க்கக்கூடாது. நான் சோஹேலின் கடந்த காலம் என்ன என்று எனக்கு தெரியும் அவரை நான் மனதார ஏற்றுக்கொண்டேன்.

மாப்பிள்ளைக்கு கண்டிஷன்

மாப்பிள்ளைக்கு கண்டிஷன்

இதையடுத்து அண்மையில் வெளியான லவ் ஷாதி டிராமாவின் எபிசோடில், ஹன்சிகாவின் அம்மா, சோஹேலின் அம்மா விழாக்களுக்கு தாமதமாக வருவதைப் பற்றி புகார் செய்தேன் என்றும், இனி நீங்கள் தாமதமாக வந்தால், ஒவ்வொரு நிமிட தாமதத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் கூறி உள்ளார். இந்த எபிசோடு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹார்மோன் ஊசியா?

ஹார்மோன் ஊசியா?

ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டு பெரிய பெண்ணாக எழுந்த குற்றச்சாட்டுக்கும் விளக்கம் அளித்திருந்தார். அதில், இந்த விமர்சனத்தை கேட்டு என் இதயமே உடைந்து விட்டது, அந்த வயதிலேயே வந்த அனைத்து விமர்சனங்களையும் நான் தைரியமாக எதிர்கொண்டேன்.ஹார்மோன் ஊசி போட்டு இருந்தால், இந்நேரம் நான் டாட்டா பிர்லாவை விட பணக்காரப் பெண்ணாக இருந்து இருப்பேன். இதை எழுதுபவர்களுக்கு கொஞ்சம் கூட பொது அறிவு இல்லையா? என பத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X