மை நேம் ஈஸ் ஸ்ருதி... த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஹன்சிகா... கதை கேட்டு மிரண்ட ஹன்ஸ்
மும்பை : நடிகை ஹன்சிகா மோத்வானி தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் பொழுதை கழித்துவந்த ஹன்சிகா, யூடியூப் சேனல் ஒன்றை துவக்கி அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது மை நேம் ஈஸ் ஸ்ருதி என்ற த்ரில்லர் கதையில் நடிக்க துவங்கியுள்ளார்.

ரசிகர்களின் பேவரிட்
நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மிரட்டலும், காதலும் என பல முகங்களை பார்த்து ரசிகர்கள் இவர் வசம் கிறங்கிய காலங்களும் உண்டு. குட்டி குஷ்பூ என்று அழைக்கப்பட்ட இவர் தற்போது தனது உடலை குறைத்து மேலும் சிக்கென ஆகியுள்ளார்.

பல்வேறு வீடியோக்கள்
கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருந்த ஹன்சிகா, யூடியூப் சேனலை துவங்கி அதில் தன்னுடைய பல்வேறு வீடியோக்களை பதிவிட்டார். மேலும் சமையல் வீடியோக்களையும் தனது நண்பர்களுடன் இணைந்து பதிவிட்டு ரசிகர்களின் மனதை அள்ளினார். இவரது சேட்டைகள் அந்த வீடியோவில் சிறப்பாக இருந்தன.

மை நேம் ஈஸ் ஸ்ருதி படம்
இந்நிலையில் தற்போது லாக்டவுனில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் படங்களின் சூட்டிங்குகள் துவக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தெலுங்கில் மை நேம் ஈஸ் ஸ்ருதி என்ற த்ரில்லர் படத்தின் சூட்டிங்கில் தற்போது ஹன்சிகா பங்கேற்றுள்ளார். இதன் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. படத்தை ரம்யா புருகு மற்றும் நாகேந்தர் ராஜூ ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

ஹன்சிகா உற்சாகம்
இந்த படம் ரசிகர்களை சீட் எட்ஜில் இருத்தி வைக்கும் என்று ஹன்சிகா உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். தன்னிடம் டைரக்டர் ஸ்ரீனிவாஸ் ஓம்கார் கதை சொல்லும்போது தனக்கும் அந்த அனுபவமே ஏற்பட்டதாக ஹன்ஸ் கூறியுள்ளார். சுதந்திரமான ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் அசாதாரண நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











