Don't Miss!
- News
வடமாநிலத்தவர்களே தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறார்கள்.. நாம் தமிழர் சீமான் பரபரப்பு
- Sports
ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Finance
வருமான வரியை குறைக்க டிப்ஸ்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
திருமணத்திற்கு பிறகு ஹன்சிகா பதிவிட்ட முதல் போஸ்ட்.. குஷ்பு முதல் மந்திரா பேடி வரை வாழ்த்து மழை!
சென்னை: நடிகை ஹன்சிகா கடந்த டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் தனது நீண்ட நாள் நண்பரான சோஹேல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு முதன் முறையாக நடிகை ஹன்சிகாவின் திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் சூப்பர் கேப்ஷன் உடன் ஹன்சிகா பதிவிட்டுள்ளார்.
அந்த போட்டோக்களை பார்த்த பிரபல நடிகைகள் நடிகை ஹன்சிகாவை வாழ்த்தி தள்ளி உள்ளனர்.
ஹன்சிகா
திருமணத்தை
தொடர்ந்து
ஹனிமூனுக்கு
போகலையாம்..
ஏன்
தெரியுமா?

ஹன்சிகாவுக்கு டும் டும் டும்
நடிகர் சிம்புவுடன் பிரேக்கப் ஏற்பட்ட நிலையில் நடிகை ஹன்சிகா பற்றிய எந்த வொரு காதல் பேச்சுக்களும் அடிபடாத நிலையில், திடீரென தனது வருங்கால கணவர் யாரென்று அறிமுகப்படுத்தினார். உடனடியாக கடந்த டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா அரண்மனையில் பிரம்மாண்டமாக தனது திருமணத்தை நடத்திய ஹன்சிகா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின் ஹெச்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

திருமண புகைப்படங்கள்
தொழிலதிபர் சோஹேல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்ட நடிகை ஹன்சிகா அந்த அழகிய தருணங்கள் அடங்கிய பிரத்யேக புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். ஹன்சிகாவை மணக் கோலத்தில் பார்த்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

ராணி போல
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரண்மனையில் சோஹேல் கத்தூரியாவை கரம் பிடித்த நடிகை ஹன்சிகா ஒரு ராணியை போலவே மணமகள் உடையில் ஜொலித்தார். உடல் முழுக்க விலை உயர்ந்த நகைகளும் பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும் வண்ணன் உள்ளன.

குஷ்பு வாழ்த்து
சுந்தர். சி இயக்கத்தில் வெளியான தீயாய் வேலை செய்யணும் குமாரு, அரண்மனை படங்களில் நடித்த நடிகை ஹன்சிகாவை ரசிகர்கள் குட்டி குஷ்பு என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில், ஹன்சிகாவின் திருமண புகைப்படங்களை பார்த்த நடிகை குஷ்பு "வாழ்த்துக்கள்.. பேபி டால்.. ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்கள் உன் வாழ்வில் நிறையட்டும்" என வாழ்த்தி உள்ளார்.

மந்திரா பேடி வாழ்த்து
நடிகை குஷ்புவை தொடர்ந்து நடிகை மந்திரா பேடி, ஈஷா குப்தா, நடிகர் சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிகை ஹன்சிகா மற்றும் மணமகன் சோஹேல் கத்தூரியாவை வாழ்த்தி வருகின்றனர். ரசிகர்களும் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் திருமண புகைப்படங்களை பார்த்து ஹார்ட்டீன்களை அள்ளி வீசி வருகின்றனர்.

நவ் அண்ட் ஃபாரெவர்
திருமணத்தில் எடுத்த எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களை பதிவிட்ட நடிகை ஹன்சிகா Now and Forever என அட்டகாசமான கேப்ஷன் போட்டு ஒட்டுமொத்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துக்களை அள்ளி உள்ளார். நடிகை லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட 4.5 லட்சம் பேர் இதுவரை ஹன்சிகாவின் திருமண போட்டோக்களுக்கு லைக் போட்டுள்ளனர்.