இன்னும் 7 நாள் ஷூட்தான் பாக்கியாம்... மீண்டும் தொடங்குகிறது சிம்பு- ஹன்சிகாவின் 'மஹா' படப்பிடிப்பு!
சென்னை: ஹன்சிகாவின் 50 வது படமான 'மஹா' ஷூட்டிங் சென்னையில் மீண்டும் தொடங்குகிறது.
Recommended Video
நடிகை ஹன்சிகா இப்போது நடித்துவரும் படம் 'மஹா'. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்குகிறார்.
இவர், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இயக்குனர் லஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

காவி உடை ஹன்சிகா
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் காவி உடை அணிந்து ஹன்சிகா புகைப் பிடிப்பது போல் இருந்ததால் எதிர்ப்புக் கிளம்பியது. இந்தக் படத்தில் நடிகை சாயாசிங், தம்பி ராமையா, நாசர், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சிம்பு கேரக்டர்
இந்தப் படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. காதல் முறிவுக்குப் பிறகு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவின் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அவர் விமானியாக நடிக்கிறார். கதையில் மாற்றம் செய்து சிம்பு கேரக்டரை அதிகமாக்கி உள்ளனர்.

கோவா விமானி
இயக்குனர் ஜமால் கூறும்போது, சிம்புவின் கேரக்டர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த ஒரு விமானியின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி அவர் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது' என்று கூறியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ஶ்ரீகாந்த், விக்ரம் என்ற போலீஸ் கமிஷனர் கேரக்டரில் நடிக்கிறார்.

மீண்டும் படப்பிடிப்பு
ஶ்ரீகாந்த் வரும் காட்சிகள் திரில்லாக இருக்கும் படக்குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இடையில் நிறுத்தப்பட்டு இருந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருக்கிறது. ' 7 நாள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி இருக்கிறது. வரும் 17 ஆம் தேதி சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதோடு படம் முடிகிறது' என்று அதன் தயாரிப்பாளர் மதியழகன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











