ஹன்சிகாவின் யூடியூப் சேனல்.... 2,00,000 பின்தொடர்பவர்கள்... ஹன்ஸ் ஹாப்பி வீடியோ பதிவு
மும்பை : நடிகை ஹன்சிகா தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருபவர்.
சமீபத்தில் மை நேம் ஈஸ் ஸ்ருதி என்ற த்ரில்லர் படத்தில் அவர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
லாக்டவுன் சமயத்தில் அவர் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி பல வீடியோக்களை பதிவிட்ட நிலையில் தற்போது அந்த சேனல் 200K சப்ஸ்கிரைபர்சை பெற்றுள்ளது.

சிறப்பான நடிப்பு
நடிகை ஹன்சிகா மோத்வானி, தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் அரண்மனை உள்ளிட்ட படங்கள் மிரட்டலாக அமைந்தது. சோகம், குழந்தைதனம், மிரட்டல், கோபம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் மிகவும் எளிமையாக தன்னுடைய நடிப்பில் கொண்டுவருவார் ஹன்சிகா.

யூடியூப் சேனல் துவக்கம்
இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்த ஹன்சிகா,தன்னுடைய பொழுதை உபயோகமாக கழிக்கும்வகையில் யூடியூப் பக்கம் ஒன்றை துவக்கி பல்வேறு வீடியோக்கள், சமையல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பதிவிட்டார்.

சிறப்பான சமையல் வீடியோ
இந்த வீடியோக்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன. அவருடைய சகோதரர் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. நண்பர்களுடனும் சேர்ந்து சமையல் வீடியோவையும் பதிவிட்டிருந்தார். அதுவும் சிறப்பாக அமைந்தது.

ஹன்சிகா நன்றி வீடியோ
இந்நிலையில் இந்த யூடியூப் சேனல் தற்போது 2,00,000 சப்ஸ்கிரைபர்சை பெற்றுள்ளதாக நடிகை ஹன்சிகா தனது யூடியூப் பக்கத்தில் நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார். இதில் இதுவரை தான் பதிவிட்ட வீடியோக்களுக்கு ரசிகர்களின் அன்பிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து தான் செயல்பட உள்ளது குறித்தும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











