'ரொம்ப கேவலமா இருக்கு...' - பிக்பாஸ் நடிகையை கோவமாகத் திட்டிய ஹன்சிகா
மும்பை : இந்தி பிக்பாஸில் நடிகை ஹினாகான் பேசியது பெரும் சர்ச்சையாகி வருகிறது. அவரது பேச்சைக் கேட்ட நடிகை கன்ஷிகா கோவமாக திட்டி ட்வீட் செய்திருக்கிறார்.
தற்போது இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 11-வது சீசன் நடந்துவருகிறது. பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹினாகான் என்ற நடிகை தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகைகள் பற்றி பேசியது பலருக்கும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
ஹீரோயின்கள் குண்டாக இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என தென்னிந்திய இயக்குனர்கள் நடிகைகளை எடை அதிகரிக்கும்படி கூறுவது வழக்கம் என ஹினா கான் கூறினார்.
குண்டாகச் சொல்கிறார்கள்
பிக்பாஸ் வீட்டுக்குள் சக ஹவுஸ்மேட்ஸுடன் பேசிக் கொண்டிருக்கும் நடிகை ஹினாகான், 'தென்னிந்திய ஹீரோயின்களை குண்டாக இருந்தால்தான் ரசிகர்களுக்குப் பிடிக்கும் எனச் சொல்லி எடை அதிகரிக்கும்படி டைரக்டர்கள் கூறுவார்கள்' எனப் பேசியிருக்கிறார்.
ஹன்சிகா கொதிப்பு
நீங்கள் சொல்வதற்கு என்ன அர்த்தம் எனப் புரிகிறதா? நீங்கள் தென்னிந்திய திரையுலகத்தை அவமதிக்கிறீர்களா? எனக் கேட்டு #shamehinakhan என ட்வீட் செய்துள்ளார் நடிகை ஹன்சிகா.
பாவம் ஹினாகான்
பல பாலிவுட் நடிகர், நடிகைகளும் தென்னிந்தியப் படங்களில் நடித்திருக்கிறார்கள், தற்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது பாவம் ஹினாகானுக்கு தெரியவில்லை போலும் எனக் கூறியுள்ளார் ஹன்சிகா.
பெருமை
'ஹினாகான் என்ன உளறினாலும், ஒரு தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகையாக தென்னியந்தியப் படங்களில் நடிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். எனக் கூறியுள்ளார் ஹன்சிகா.
புல்ஷிட்
தொடர்ந்து கோபம் தணியாமல் பதிலடி கொடுத்த நடிகை ஹன்சிகா 'ஹினா கான் கூறியது முற்றிலும் புல்ஷிட்' என கோபத்துடன் பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











