அடுத்து விஜய்க்கு 2 ஜோடிகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா!
சிம்புத்தேவன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ''கத்தி'' படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் படத்திற்குப் பின்னர் சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிக்கிறார். இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டு ஜோடிகள்
படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் சிம்புதேவன். இந்நிலையில், விஜய் ஜோடியாக இரண்டு நாயகிகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், ஸ்ருதிஹாசனும், ஹன்சிகாவும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதன்முறையாக ஸ்ருதி
ஹன்சிகா, ஏற்கனவே விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார். ஆனால் ஸ்ருதிஹாசன், இப்போது தான் முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர உள்ளார்.

அப்பா, மகனாக விஜய்
மேலும் விஜய், இந்தப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்பா ஜோடியாக ஸ்ரீதேவி
அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலாற்றுப் பின்னணியில்
ராஜமௌலி இயக்கிய மகதீரா தெலுங்குப்படத்தைப்போல் பிரம்மாண்டமான வரலாற்றுப் பின்னணி கொண்ட படமாக இதனை இயக்க இருக்கிறாராம் சிம்புதேவன். விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்புகளையும் இயக்குநர் சிம்புதேவன் அறிவிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











