மீண்டும் சக்சேனா... சாக்ஸ் பிக்சர்ஸ் ஆரம்பம்... புதுப்படத்தை ரிலீஸ் செய்கிறார்!

இவர் சன் டிவிக்காக வாங்கி வெளியிட்ட படங்களைவிட, இவர் மீது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கொடுத்த புகார்கள் அதிகம்.
ஆட்சி மாறிய கையோடு, அவரைக் கைது செய்தது போலீஸ். சிறையில் அடைத்தனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் அவர் மீது மோசடி, கொலை முயற்சி வழக்குகள் பதிவாகின. இவருடன் சேர்ந்து ஐயப்பன் மற்றும் சிலர் கைதாகினர்.
இனி இவர்கள் வெளிவர முடியுமா எனும் அளவுக்கு வழக்குகள் குவிந்தன இவர்கள் மீது. நீதிமன்றத்துக்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டபோது, அய்யோ எங்களைக் காப்பாத்துங்க, அடிச்சே கொன்னுடுவாங்க போலிருக்கு என்று கதறினர் இருவரும். ஆனால் திரையுலகினர் கண்டுகொள்ளவே இல்லை.
ஒரு வழியாக அனைத்து வழ்ககுகளிலும் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியில் வந்த சக்சேனா, சன் டிவியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார். இப்போது மீண்டும் திரைப்படத் தொழிலில் இறங்கியுள்ளார்.
சாக்ஸ் பிக்சர்ஸ் எனும் பெயரில் புதிய பட நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ள சக்சேனா, தனது பேனரின் கீழ் சாருலதா என்ற படத்தை வெளியிடுகிறார். ப்ரியாமணி இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம். சூர்யாவின் மாற்றானுக்கு முன்பே உருவான படம் என தயாரிப்பாளர் தர்பபில் கூறி வருவதால், இந்த பரபரப்பை வசூலாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையில் படத்தை வாங்கிவிட்டார் போலிருக்கிறது.
'சரி சரி வரட்டுங்க.., சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில்தானே செலவழிக்க வேண்டும்...!' - இது கோடம்பாக்க வாசிகளின் கமெண்ட்!


Click it and Unblock the Notifications











