லுங்கி டான்ஸ் போட்ட ஹனுமான் பட ஹீரோ.. ‘வைப் இருக்கு பேபி’ பாட்டு எப்படி இருக்கு பாஸ்?

சென்னை: கடந்த ஆண்டு வெளியான ஹனுமான் படம் 300 கோடி வசூல் செய்து அசத்திய நிலையில், அடுத்ததாக சூப்பர் ஹீரோ படமான மிராய் படத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ளார். தேஜா சஜ்ஜா - கார்த்திக் கட்டமனேனி - டி. ஜி. விஸ்வ பிரசாத் - கிருத்தி பிரசாத் - பீப்பிள் மீடியா ஃபேக்டரி என பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'மிராய் ' படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

'ஹனுமான்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் நாடு முழுவதும் பிரபலமான 'சூப்பர் ஹீரோ' தேஜா சஜ்ஜா- 'சூப்பர் யோதா'வாக நடிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'வைப் இருக்கு பேபி' பாடலுக்கான ப்ரோமோ வெளியாகி பரபரப்பையும், உற்சாகத்தையும் உண்டாக்கியது. தற்போது இந்த பாடலின் முழு லிரிக்கல் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Hanuman actor Tejja Sajja s Mirai movie first single vibe irukku baby out now
Photo Credit:

' வைப் இருக்கு பேபி' என்ற பாடல் புயல் போல் ரசிகர்களை தாக்கி வருகிறது. இப்பாடலின் இசை.. உற்சாகத்தையும், துடிப்பான ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. இந்தப் பாடலில் சாக்ஸபோன், டிரம்ஸ் போன்ற இசை கருவிகளின் இனிய ஓசைகளால் நிறைந்துள்ளது. இந்தப் பாடல் கொண்டாட்டமான ஒரு சூழலையும் உருவாக்குகிறது. பாடலாசிரியர் டி. மோகன் குமார் எழுதிய பாடல் வரிகளுக்கு... ஹீரோ வேறலெவல் பர்ஃபார்மன்ஸ் பண்ணியுள்ளார்.

தேஜா சஜ்ஜா ஒவ்வொரு அசைவிலும் தூள் கிளப்ப ஹீரோயின் ரித்திகா நாயக்கின் கவர்ச்சியில் ரசிகர்கள் கொள்ளை போகின்றனர். அதிலும், லுங்கி கட்டிக் கொண்டு பெண் டான்சர்கள் ஆட அவர்களுடன் சேர்ந்து லுங்கி அணிந்துக் கொண்டு இன்னொரு லுங்கி டான்ஸையே தேஜா சஜ்ஜா போட்டுள்ளார்.

பின்னணி பாடகர் சாய் சரண் பாஸ்கரூணி இந்தப் பாடலை தன்னுடைய இனிய குரலால் மெருகேற்றுகிறார். அவருடைய காந்த குரலில் இந்தப் பாடல் மேலும் துள்ளலாகவும், உற்சாகமாகவும் உள்ளன.

தேஜா சஜ்ஜா மற்றும் ரித்திகா நாயக்கின் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி காட்சிகளை உயிர்ப்புள்ளதாக்குகிறது. இந்த இருவரின் அழகான நடன அசைவு மற்றும் வசீகரம்.. அவர்களை ஆளுமை மிக்க கவர்ச்சிகரமான திரை ஜோடியாக மாற்றுகின்றன. பாடல் வரிகளில் இடம்பெறுவதை போல் அவர்கள் உண்மையிலேயே வெற்றிகரமான ஜோடியாக தோன்றுகிறார்கள். தேஜா சஜ்ஜா மிகவும் ஸ்டைலிஷ்ஷாக தோன்றினாலும்.. ரித்திகாவும் கவர்ச்சியாக மிளிர்கிறார்.

'வைப் இருக்கு பேபி..' பாடல்- கலக்கலான மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை அளிக்கிறது. இந்தப் பாடல் விரைவில் அனைத்து இசை சார்ந்த தளங்களிலும் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'மிராய்' படத்தில் மனோஜ் மஞ்சு ஒரு சக்தி வாய்ந்த வில்லனாக நடிக்கிறார். இவருடன் ஷ்ரேயா சரண், ஜெயராம் , ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி 'மிராய்' படத்தை இயக்குவதுடன் ஒளிப்பதிவாளராகவும் தன் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறார். படத்தின் திரைக்கதையை கார்த்திக் கட்டமனேனி வடிவமைத்துள்ளார். மணி பாபு கரணம் எழுத்து மற்றும் வசனங்களில் பங்களிப்பு செய்திருக்கிறார்.

கலை இயக்குநர் ஸ்ரீ நாகேந்திர தங்கலா- 'மிராய் 'படத்திற்கான கற்பனை உலகத்தை காட்சி ரீதியாக‌ செழிப்பாகவும், நேர்த்தியாகவும், விரிவாகவும் உருவாக்கி இருக்கிறார். இப்படத்திற்கு சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார்.‌

செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் எட்டு மொழிகளில் 'மிராய்' வெளியாகிறது. மேலும் இந்தத் திரைப்படம் 2D மற்றும் 3 D தொழில்நுட்பங்களில் வெளியாகிறது. சிவகார்த்திகேயனின் மதராஸி மற்றும் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படங்களுக்கு போட்டியாக வெளியாவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X