Hanuman Box Office Collection: 4 நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த ஹனுமான்! சைலண்ட் சாதனை!

சென்னை: பொங்கலையொட்டி வெளியான படங்களில் சைலண்டாக வசூல் சாதனை செய்து வருகிறது ஹனுமான் படம். இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படம் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது. பிரைம் ஷோ என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் 12 கோடி ரூபாய் செலவில் ஹனுமான் படம் உருவாகியுள்ள நிலையில், படம் பான் இந்தியா படமாக கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

படத்தில் தேஜா சஜ்ஜாவிற்கு அம்ரிதா ஐயர் ஜோடியாக நடித்துள்ளார். வினய் ராய் அவருக்கு வில்லனாகியுள்ள நிலையில் வரலட்சுமி சரத்குமார் சகோதரியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள், சூப்பர் ஹீரோ கான்செப்ட் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பொங்கல் ரேஸில் பங்கேற்ற படங்களில் அதிகமான கவனத்தை ஹனுமான் படத்திற்கு பெற்றுத் தந்துள்ளது. ரிலீசான முதல் நாளிலிருந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த இந்தப் படம் கடந்த சில தினங்களில் அதிகமான வசூலை பெற்றுள்ளது.

Hanuman movie joins 100 crore club in just 4 days

ஹனுமான் படம்: நடிகர் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஹனுமான். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 12ம் தேதி வெளியான படங்களுடன் இணைந்து வெளியான ஹனுமான், மிகச்சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது. படத்தின் சூப்பர் ஹீரோ கதை சொல்லப்பட்ட விதம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தநிலையில் படத்தின் VFX காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

கிளைமாக்ஸ் காட்சிகள்: படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மெய்சிலிர்க்கும் அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும் படத்தின் இசை மற்றும் VFX காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். மேலும் தேஜா சஜ்ஜாவின் நடிப்பும் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமாக பங்களித்துள்ளதாகவும் படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது கேரக்டரை உணர்ந்து செயல்பட்டுள்ளதாகவும் படத்திற்கு சிறப்பான கமெண்ட் எழுந்தன. இந்நிலையில் கடந்த 4 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக படக்குழுவினர் மற்றும் நாயகன் தேஜா சஜ்ஜா உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்: இந்தப் படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். துவக்கம் முதல் இறுதிவரை ஒவ்வொரு காட்சியும் இருக்கையின் நுனியில் அமர வைத்துள்ளதாக சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்ததையும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து படத்தின் இயக்குநர் பிரஷாந்த் வர்மாபிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. படத்தில் காமெடி மற்றும் ரொமாண்டிக் காட்சிகளும் சிறப்பாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கலாய்க்கும் ரசிகர்கள்: முன்னதாக பிரபாஸ், கீர்த்தி சனோன் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான ஆதிபுருஷ் படத்துடன், ஹனுமான் படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். படத்தில் வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பும் அதிகமான பாராட்டுக்களை பெற்றுள்ளது. முன்னதாக வெளியான ஆதிபுருஷ் படத்தின் இயக்குநரையும் இந்த படத்தை வைத்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்துடன் இணைந்து வெளியாகியுள்ள ஹனுமான், அந்தப் படத்தை காட்டிலும் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்கு உரியதாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X