Hanuman: ஹனுமான் எஃபெக்ட்.. தியேட்டரில் சாமி வந்து ஆடிய ரசிகை.. டிரெண்டாகும் வீடியோ..!
சென்னை: கோயில்களில் எல்.ஆர். ஈஸ்வரியின் செல்லாத்தா செல்ல மாரியாத்தா என பாடல் ஒலிக்க ஆரம்பித்தாலே பல பெண்களுக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், தியேட்டர்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அரிதான ஒன்றாக இருந்து வரும் நிலையில், ஹனுமான் படத்தை பார்த்து விட்டு பக்தை ஒருத்தர் தியேட்டரில் சாமி வந்து ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் வினய் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு சங்கராந்தி வெளியான படம்தான் ஹனுமான்.

200 கோடி வசூல்: வெறும் 20 கோடி பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோ மற்றும் ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆஞ்சநேய பக்தர்களின் பேவரைட் படமாக மாறியது. தெலுங்கில் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்துடன் ஹனுமான் இருக்க பயமேன் என்கிற நம்பிக்கையுடன் வெளியான இந்த திரைப்படம் குண்டூர் காரம் படத்தை விட அதிக வசூல் ஈட்டி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி மாஸ் காட்டி வரும் நிலையில், மூன்று வாரங்கள் ஆகியும் தொடர்ந்து அந்த படத்தை மக்கள் தியேட்டர்களுக்கு சென்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தியேட்டரில் சாமியாட்டம்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹனுமான் திரைப்படம் வட இந்தியாவில் அதைவிட பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட சாதனையை படைத்து வருகிறது. அயோத்தியில் சமீபத்தில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்ற நிலையில், வட இந்தியா முழுக்க ராம பக்தர்கள் அதிகரித்து காணப்படும் நிலையில் ஹனுமான் படம் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் ஹனுமானை அட்டகாசமாக காண்பித்த நிலையில், படக்குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தியேட்டர் ஒன்றில் சமீபத்தில் ஹனுமான் திரைப்படத்தை பார்த்த ரசிகை ஒருவர் சாமி வந்து ஆடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அளவில் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது. அந்த பெண்மணியை சமாதானம் செய்ய ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் முயல்வது மற்றும் ஹனுமானே வந்து விட்டார் என ரசிகர்கள் கையெடுத்துக் கும்பிடுவது உள்ளிட்டவை நடந்துள்ளன.
பிரபாஸின் ஆதி புருஷ் திரைப்படம் வெளியான போது திரையரங்கில் குரங்கு ஒன்று வந்த காட்சிகள் அதிகம் பகிரப்பட்டது. அதைப்போல, இயக்குநர் ஓம் ராவத் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு சீட்டை ஹனுமானுக்காக விட்டு விடுங்கள் என புரோமோஷன் ஸ்டண்ட் செய்தார். ஆனால், அந்த படம் படு சுமாராக இருந்த நிலையில் பல தியேட்டர்கள் டிக்கெட் புக் செய்யப்படாமல் காத்து வாங்கிய காட்சிகளும் அரங்கேறின.


Click it and Unblock the Notifications











