அயோத்தியில் ராமர் சிலைக்கு 33 கிலோவில் கிரீடம்..கோடிக்கணக்கில் நன்கொடையை வழங்கிய படக்குழு!

சென்னை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக மேலாளரான முகேஷ் அம்பானி, அயோத்தியில் பால ராமருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கிரீடத்தை பரிசளித்துள்ளதாக சோஷியல் மீடியாவில் செய்தி வெளியாகி உள்ள நிலையில், ஹனுமான் படக்குழு பல கோடியை வாரி கொடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மங்கல இசையுடன் விழா தொடங்கியது. இதில் தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாதஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன.

hanuman movie team donate 2 crore to Ayodhya Ram temple

கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 12.05 மணி அளவில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். மேலும், இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முகேஷ் அம்பானி: இந்த பிரம்மாண்ட விழாவிற்கு நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் முழு குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இதில், நிதா அம்பானி பாரம்பரிய உடையான புடவையில் தனது கணவருடன் வந்திருந்தார். மேலும், அவர்களின் மகள் இஷா அம்பானி தனது கணவர் கவுதம் பிரமலுடன் வந்தார். ஆகாஷ் அம்பானியும் தனது மனைவி ஷ்லோகா அம்பானியுடன் இந்த மங்கள நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

hanuman movie team donate 2 crore to Ayodhya Ram temple

வண்ண விளக்குகள்: முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜெய்ஸ்ரீராம் என்றும் கோயிலின் மாதிரியும் வண்ண விளக்குகளால் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட வீடு. ஜெய்ஸ்ரீராம் என அன்டீலியா வீட்டில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ராமர் கோயில் கோபுரத்தின் மாதிரியும் ஹாலோகிராம்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

3 கிரீடங்கள் பரிசு: இந்நிலையில், முகேஷ் அம்பானியின் குடும்பம் 33 கிலோ தங்கத்தை பயன்படுத்தி 3 கிரீடங்களை அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை பிரபல ஊடகமொன்று தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​இந்த விவகாரம் உண்மைக்குப் புறம்பானது என்று செய்தி வெளியாகி உள்ளது.

hanuman movie team donate 2 crore to Ayodhya Ram temple

ஹனுமான் படக்குழு: அதேபோல, பொங்கலுக்கு வெளியான ஹனுமான் படக்குழுவும் நன்கொடையை வாரி வழங்கி உள்ளது. பிரசாந்த் வர்மா இயக்கி இந்த படத்தில்,ஹீரோவாக தேஜா சஜ்ஜா நடித்திருந்தார். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு பான் இந்தியா அளவில் மாபெரும் வரவேற்பு கிடைத்ததால், 10 நாட்களிலே ரூ.200 கோடிக்கு மேல் வசூலானது. இதையடுத்து, படக்குழு 53 லட்சத்து 28 ஆயிரத்து 211 டிக்கெட் விற்பனை ஆனதாகவும், அதில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.5 வீதம் மொத்தமாக ரூ.2 கோடியே 66 லட்சத்து 41 ஆயிரத்து 55 ரூபாய் அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X