குழந்தைகளை குஷிப்படுத்த வரும் 'அனுமனும் மயில்ராவணனும்'!

ராமாயண கதாபாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அனிமேஷன் திரைப்படம் 'அனுமனும் மயில்ராவணனும்'.

Recommended Video

குழந்தைகளை குஷிப்படுத்த வரும் அனுமனும் மயில்ராவணனும்-

சென்னை: ராமாயண கதாபாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'அனுமனும் மயில்ராவணனும்' அனிமேஷன் திரைப்படம் ஜூலை மாதம் 6ம் தேதி வெளியாகிறது.

Hanumanum Mayilravananum a animation film for kids.

நாடு முழுதும் உள்ள குழந்தைகளின் மனதை கவர்ந்த கார்ட்டூன் நிகழ்ச்சியான சோட்டா பீம்-ஐ உருவாக்கிய கிரீன் கோல்டு அனிமேஷன் நிறுவனம், அனுமனும் மயில்ராவணனும்' எனும் அனிமேஷன் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

Hanumanum Mayilravananum a animation film for kids.

பல் மருத்துவம் படித்து, பின்னர் இங்கிலாந்து சென்று அனிமேஷன் பயின்று, வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்களில் பணியாற்றிய எழில் வேந்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராமாயணத்தின் கடைசிப் பகுதியில் வரும் சம்பவங்களை தொகுத்து, கற்பனை கலந்து இந்த படத்தை உருவாக்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Hanumanum Mayilravananum a animation film for kids.

இப்படம் குறித்து அவர் கூறியதாவது, "ஹனுமன் தான் இப்படத்தின் ஹீரோ. இறுதிப் போரில் நிராயுதபாணியாக நிற்கும் ராவணனிடம் இன்று போய் நாளை வா என ராமர் அவகாசம் கொடுக்கிறார். போர் களத்தில் இருந்து அரண்மனை செல்லும் ராவணன், தனது சகோதரனான பாதாள உலகின் ராஜாவான தந்திரக்காரன் மயில்ராவனைக் கொண்டு ராமரையும், லட்சுமணனையும் சிறைப்பிடிக்கிறார். அவனை அழித்து, ராமரையும், லட்சுமணனையும் அனுமன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை சாகசம் நிறைந்த, சுவாரஸ்யமான கதையமைப்பில் சொல்லியுள்ளோம்.

Hanumanum Mayilravananum a animation film for kids.

முதல் முறையாக பத்து தலை ராவணன், புதுமையான ஒரு வடிவத்தில் சித்தரிக்கபட்டுள்ளார். அவரது பத்து தலைகளும் தனித்தனியே செயல்படும். பாம்பு மனிதர்கள், ஆளை விழுங்கும் ராட்சத புழுக்கள் என படத்தில் வரும் பல வித்தியாசமான கேரக்டர்கள் குழந்தைகளை வெகுவாக கவரும்.

Hanumanum Mayilravananum a animation film for kids.

இந்த படத்தை முழுக்க முழுக்க சென்னையிலேயே உருவாக்கியுள்ளோம். முதல் முறையாக இந்தியாவில் தயாரான சர்வதேச தரம் கொண்ட இதிகாசக் கதையம்சம் உள்ள 3டி அனிமேஷன் படமாக 'அனுமனும் மயில்ராவணனும்' இருக்கும்.

Hanumanum Mayilravananum a animation film for kids.

இந்தியா முழுவதும் சுமார் 350 திரையங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது. ஜூலை 6ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது" இவ்வாறு அவர் கூறினார்.

Hanumanum Mayilravananum a animation film for kids.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X