Just In
- 14 min ago
அம்சமான போட்டோஷூட்.. அழகை அள்ளும் ஐஸ்வர்யா தத்தா... வாய் பிளந்த ரசிகர்கள்!
- 24 min ago
தாவணியில் கலக்கும் குட்டி ஜானு... மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள்!
- 11 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 12 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
Don't Miss!
- News
தமிழகத்தில் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
- Automobiles
இப்போதான் ஜப்பானிலேயே அறிமுகமாகுதா இந்த ஹோண்டா பைக்?! ராயல்என்பீல்டு மீட்டியோருக்கு போட்டியாவந்திச்சே அதுதாங்க
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.01.2021: இன்று இந்த ராசிக்காரங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கப் போகுது…
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரே ஒரு மாஸ்டர் பிளாஸ்டர்.. சச்சினை வாழ்த்தி புகழ்ந்து தள்ளிய திரைப்பிரபலங்கள் !
சென்னை : முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் மற்றும் கிரிகெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்,
சச்சினின் பிறந்தநாளை ஒட்டி சமூக வலைத்தளங்கள் முழுக்க ரசிகர்கள் சச்சினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இதை தாண்டி கிரிக்கெட்டில் அவர் புரிந்த சாதனைகள் அவரின் ஈடுகட்ட முடியாத திறமை என்று அனைத்தையும் பேசி வருகின்றனர்.
பாலிவுட் பிரபலமான நடிகர் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளனர். இதில், இதில் உடல்கூறு, மகிழ்ச்சி, அன்பு மற்றும் மரியாதை எப்போதும் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் உங்களின் பங்கு மகத்ததானது. அவ்வளவு எளிதாக யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது என்று புகழ்ந்து ட்விட்டரில் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார் அபிஷேக் பச்சன்.

ஒரே ஒரு மாஸ்டர் பிளாஸ்டர்
தெலுங்கு சினிமா சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவியிம் தன் வாழ்த்தை சமூக வலைத்தளங்களின் வாயிலாக கூறியிருக்கிறார். இதில் கிரிக்கெட்டின் கடவுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் இந்தியாவின் புகழ் என்றும் சச்சின் தான், ஒரே ஒரு மாஸ்டர் பிளாஸ்டர் அவர் தான் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தொடர்ந்து நீங்கள் இந்தியர்களை உத்வேகபடுத்த வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். இந்த பதிவுடன் தான் சச்சினுடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார் சிரஞ்சீவி .‘

என்றும் உங்கள் ரசிகன்
மலையாள நடிகரான நிவின் பவ்லியும் சிரஞ்சீவியை போல் கால்பந்து போட்டி ஒன்றின் போது சச்சினுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவேற்றி தனது வாழ்த்தை கூறியுள்ளார். இதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் லெஜன்ட் என்று கூறியிருக்கிறார் இன்றைய மக்களை உத்வேக படுத்தியதற்கு நன்றி உங்களுக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்க நான் வேண்டிக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் இன்றும் நான் உங்களுடயை ரசிகன் தான் என்று மகிழ்ச்சி பொங்க கூறியிருக்கிறார் நிவின் பவ்லி .

கிரிக்கெட் ஜாம்பவான்
தமிழில் நடிகர் அருண்விஜய், சச்சினுடன் தான் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்தை என்று கூறியுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் என்றென்றும் உங்கள் கடின உழைப்பு தொடர வேண்டும் அதற்கு ஆண்டவன் அருள்புரிய வேண்டும் என்று தனது வாழ்த்தை கூறியுள்ளார் நடிகர் அருண்விஜய் .

வாழ்த்து மழை
மேலும் வளர்ந்து வரும் நடிகரான ஹரீஷ் கல்யாண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தன் வாழ்த்தை கூறியிருக்கிறார். இதில் மனமுருகி கூறும் ஹரீஷ் நீங்கள் எனக்கு வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமில்லை நீங்கள் பல இதயங்களை வென்றுள்ளீர்கள், பல சாதனைகளை செய்துள்ளீர்கள் என் வாழ்நாளில் பெரும்பங்கு உங்களுக்கு இருக்கிறது உங்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது நான் இன்னும் நீங்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என்று உருகிபோய் தனது மனதில் இருப்பதை அப்படியே வாழ்த்து மழையாய் கொட்டியுள்ளார் நடிகர் ஹரீஷ் கல்யாண் .
இப்படி பல பிரபலங்களும் கிரிகெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சச்சின் இன்று தனது அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி தனது பிறந்தநாளை துவங்கியுள்ளார் இதனை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.