ஹேப்பி பர்த்டே ஆரி.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் பிறந்தநாள்.. டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் ஆரி அர்ஜுனனின் 35வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஆரி டைட்டிலையும் வெற்றி பெற்றார்.

நடிகர் ஆரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நேர்மையின் சின்னம்

நேர்மையின் சின்னம்

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்த ஆரியை அவருடன் போட்டியிட்ட பல போட்டியாளர்களுக்கு பிடிக்கவே இல்லை. குறிப்பா அன்பு கேங்குக்கு சுத்தமாக ஆரியை பிடிக்கவில்லை. கடைசி வரையிலும் ஆரிக்கு எதிரான நிலைபாட்டையே பலரும் வெளிப்படுத்தி வந்தனர். சனம் ஷெட்டி மட்டுமே அவருக்கு நேர்மையின் சின்னம் என பட்டம் கொடுத்து பாராட்டினார்.

பென்ச்மார்க்

பென்ச்மார்க்

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியையே தனது நேர்மை அஸ்திரத்தால் மாற்றி விட்டார். மாற்றத்திற்கான விதையாகவும், அடுத்து வரும் போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படி விளையாட வேண்டும் என்றும் நன்றாகவே பாடம் நடத்தி சென்றுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் பென்ச் மார்க்காக ஆரி மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நானும் ஒரு விவசாயி

நானும் ஒரு விவசாயி

மாறுவோம் மாற்றுவோம், நானும் ஒரு விவசாயி என சினிமாவையும் தாண்டி ஆரி ஏகப்பட்ட நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார். சமீபத்தில் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் பேசிய ஆரி விவசாயிகள் பற்றியும் விதைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசி பாராட்டுக்களை அள்ளினார்.

ஹேப்பி பர்த்டே ஆரி

ஹேப்பி பர்த்டே ஆரி

பிக் பாஸ் டைட்டில் வின்னரான நடிகர் ஆரி அர்ஜுனனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1986ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பிறந்த நடிகர் ஆரி தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். ஆரியின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDAari என்ற ஹாஷ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

சிடிபி வெளியிட்ட சனம்

சிடிபி வெளியிட்ட சனம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரியுடன் சண்டை போட்டாலும் அவரையும் சக போட்டியாளராகவும் அவருக்குள் இருக்கும் நல்ல பண்புகளை மதித்தும் அவருடன் பழகியது ஒரு சிலர் மட்டும் தான். அதில் சனம் ஷெட்டியும், அனிதாவும் குறிப்பிடத்தக்கவர்கள். ஆரியின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் ரசிகர்கள் உருவாக்கிய பிறந்தநாள் காமன் டிபியையும் சனம் வெளியிட்டு வாழ்த்தி இருந்தார்.

சினிமாவிலும் சாதிப்பாரா

சினிமாவிலும் சாதிப்பாரா

105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து டைட்டிலையும் வெற்றி பெற்ற நடிகர் ஆரியின் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. மேலும், புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாதித்ததை போலவே சினிமாவிலும் அவர் சாதிக்க ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X