For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகைச்சுவை நடிகர் இயக்குநர் ரமேஷ் கண்ணா பிறந்த நாள் வாழ்த்துக்கள்

|

சென்னை: நடிகர் இயக்குநருமான ரமேஷ் கண்ணா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் சிறுவயதிலேயே ஆர்.எஸ்.மனோகர் நடத்திய நாடக குழுவில் சேர்ந்து நடித்துள்ளார். இவரது நடிப்பை கண்டு அப்போதைய ப்ரெசிடெண்ட் ஆஃப் இந்தியா சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் வாழ்த்தியுள்ளார்.

இவர் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்து உள்ளார். இயக்குநர்கள் காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், கே.ஸ்.ரவிக்குமார், விக்ரமன், கோடி ராமகிருஷ்ணா ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார்.

Happy Birthday Actor and Director Ramesh Khanna

இவரை முதன் முதலில் நகைச்சுவை நடிகனாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் விக்ரமன். இவர் நடித்த படம் 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்'. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. இவரின் 'ப்ரண்ட்ஸ்' பட காமெடிகள் எவெர்க்ரீன் காமெடியாக உள்ளது.

இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தனது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படம் 'படையப்பா' படத்திலும் ரஜினி கூட சேர்ந்த இவர் செய்யும் காமெடி இன்னும் மக்கள் ரசிக்கும் காமெடியாக உள்ளது.

Happy Birthday Actor and Director Ramesh Khanna

'ப்ரண்ட்ஸ்' படத்தில் வடிவேலு இவருக்கு சித்தப்பா. அவரை யாரோ கடத்த வருவதாக சொல்லி அவர்கள் பண்ண கலாட்டா இந்த நாள் வரைக்கும் சிறந்த காமெடி. துள்ளுவதோ இளமை படத்தில் இவரின் குணச்சித்திர கதாபாத்திரம் இவரின் சிறந்த நடிப்பை காட்டியது. இவர் நடிகனாக மட்டும் இல்லாமல் இயக்குநர்கவும் கலக்கி உள்ளார். அஜித்தை வைத்து 'தொடரும்' என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

இவருடைய டைமிங் கவுண்டர் அசத்தலாக இருக்கும், அதிலும் இவர் கமலுடன் வரும் காமெடி சென்ஸ் மிக நகைச்சுவையாக இருக்கும். பம்மல் கே சம்மந்தம் , பஞ்சதந்திரம் , தசாவதாரம் என அத்தனை படத்திலும் கமலுடன் இவர் பின்னி இருப்பர். பஞ்சதந்திரம் படத்தில் இவர் ரகசிய போலீஸ் ஆக கமல் மற்றும் பலரை கவனித்து இறுதியில் கைது செய்வார். அஜித்துடன் இவர் பல படங்களில் நடித்துள்ளார். அவை 'காதல் மன்னன்', 'தொடரும்', 'வில்லன்', 'ஆஞ்சநேய', 'வரலாறு', 'அட்டகாசம்', 'அமர்க்களம்', 'வீரம்' என பல உள்ளன.

Happy Birthday Actor and Director Ramesh Khanna

அதிலும் இவர் அட்டகாசம் மற்றும் வில்லன் படத்தில் ஒரு காம்போ காமெடி பண்ணி இருப்பார். இவருடன் இணைந்து நடிக்காத கதாநாயகர்கள் இல்லை. ரஜினிகாந்த் கூட படையப்பா கோச்சடையான் ஆர்யாவுடன் வட்டாரம் மாதவனுடன் பிரியமான தோழி இன்னும் சத்யராஜ் தனுஷ் அரவிந்த் சாமி, என இவருடன் நடித்த கதாநாயகர்கள் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.

ஒரு நடிகனாக, ஒரு எழுதுதளராக, ஒரு இயக்குநராக இவர் அவரது பணியை சிறந்த முறையில் செய்துள்ளார். இவர் ஒரு எழுத்தாளரும் கூட. பாஸ்கர் ஒரு ராஸ்கல் முனி படங்ககளுக்கு வசனம் எழுதி எழுதியுள்ளார். ஆதவன் இவருடைய கதை. இவர் நயன்தாராவுடன் செய்யும் காமெடி போர்ஷன் மிக அருமையாக இருக்கும். பல திறமைகளை கொண்டு இருக்கும் ரமேஷ் கண்ணா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு என்றும் நமது வாழ்த்துக்கள். அவரின் நகைச்சுவை திரைப்படங்கள் மேலும் மேலும் தொடர வேண்டும், என்று வாழ்த்துவோம்.

English summary
Ramesh Khanna born and bought in Chennai marked his name in tamil film industry as an actor, director and writer. As a child artist, he hailed from R.S. Manohar drama troupe. He worked as an assistant director to directors Karaikudi Narayanan, Pandiyarajan, K.S.Ravikumar, Vikraman, Kodi Ramakrishna. Director Vikraman made him as a comedy actor. He also directs the movie Thodarum starring Ajith and also worked as writer. Today he is celebrating his birthday and we are wishing him very happy birthday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more