நகைச்சுவை மன்னன்.. சந்தானத்திற்கு இன்று பிறந்த நாள்!

சென்னை : நகைச்சுவை மன்னன் சந்தானம் அவரது பிறந்தநாளை இ‌ன்று சிறப்பாக கொண்டாடி வருகிறார்.

சந்தானம் காமெடியனாக இருந்து பின்னாளில் ஹீரோ ஆனவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்றவர்களில் சந்தானமும் ஒருவர்.

Happy birthday santhanam

பலரும் படங்களில் காமெடி செய்வார்கள் அதில் இருந்து வேறுபட்டு தனது காமெடியை வித்தியாசமாக கொடுத்தார் சந்தானம். திரையுலகில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து உள்ளார் சந்தானம்.

நடிகர் சிம்பு தான் இவரது காமெடி திறமையை வெளிக்கொண்டு வந்தார். சிம்பு உடன் மன்மதன் படத்தில் நடித்த பிறகு தான் இவர் அடையாளம் காட்ட பட்டார். காமெடியனாக இருந்த சந்தானம் பின் ஹீரோ ஆனார்.

Happy birthday santhanam

கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடிகளில் கலக்கி கொண்டு இருந்தனர் பின் வடிவேலு மற்றும் விவேக் வந்தனர் இவர்கள் அனைவரும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தனர் அது போல தான் சந்தானமும் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

ஒரு காலத்தில் இவரது கால்ஷீட்டுக்காக பலரும் காத்து இருந்தனர். காமெடிகளில் நடிக்கும் பொழுதில் இருந்தே பிஸியாக இருந்தார் சந்தானம். இவரது காமெடிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்தது.

Happy birthday santhanam

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சந்தானம். அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இரண்டாவது படமாக இனிமே இப்படிதான் படத்தில் நடித்தார் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் சந்தானம் ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் வெளிவந்தது தான் ஏ1 கடந்த வருடம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. சந்தானம் நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.

Happy birthday santhanam

தற்போது கூட மூன்று முதல் நான்கு படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார் சந்தானம். என்ன தான்
ஹீரோ ஆனாலும் அவரது படங்களில் வரும் காமெடி நம்மளை சிரிக்கதான் வைக்கின்றன. ஹீரோவாக சக்கப் போடு போடும் ராஜா சந்தானமிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X