எளிமையே வலிமை.. அஜித் குமார் 51வது பிறந்தநாள்.. அனிருத் முதல் வெங்கட் பிரபு வரை அசத்தல் வாழ்த்து!

சென்னை: நடிகர் அஜித் குமார் தனது 51வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தடை போடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அஜித் ரசிகர்கள் இந்த பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே அஜித்

ஹேப்பி பர்த்டே அஜித்

1971ம் ஆண்டு மே 1ம் தேதி பிறந்த நடிகர் அஜித் குமார் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்கிற சொல்லுக்கு ஆகச் சிறந்த உதாரணமாக திகழ்பவர் நடிகர் அஜித் குமார். கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமாருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

ஏகே62 இசையை ஜமாய்ச்சிடுவோம்

ஏகே62 இசையை ஜமாய்ச்சிடுவோம்

தமிழ் சினிமாவையே தற்போது உலகளவில் பேச வைப்பது ராக்ஸ்டார் அனிருத்தின் இசை தான். திரைப்படத்தின் கதைகள் சரியில்லை என்றாலும், அவர் இசையமைக்கும் பாடல்கள் வேறலெவலில் ஹிட் அடித்து விடுகின்றன. வேதாளம் படத்தில் அனிருத் இசையமைத்த "ஆலுமா டோலுமா" பாடலுக்கு பிறகு அப்படியொரு குத்தாட்ட பாடல் அஜித்துக்கு இன்னமும் வரவில்லை. இந்நிலையில், ஏகே 62 படத்தின் இசையை இணைந்து அசத்தி விடுவோம் என ட்வீட் போட்டு அஜித் குமாருக்கு வாழ்த்து கூறியுள்ளார் அனிருத்.

பிரேம்ஜி வாழ்த்து

பிரேம்ஜி வாழ்த்து

அரசனாக வந்து லெஜண்டாக வாழ்ந்து ஜெண்டில்மேனாக அறியப்படும் நடிகர் அஜித் குமாருக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் அவரது பிறந்தநாள் காமன் டிபியை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தி உள்ளார்.

செம மாஷ் அப்

அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வீரம் படத்தை காலையில் ஒளிபரப்புகிறது சன் டிவி. இந்நிலையில், சூப்பரான அஜித் மாஷ் அப் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளது. அஜித்தின் மாஸ் இன்ட்ரோ சீன்கள் எல்லாம் வேறலெவலில் தெறிக்கின்றன.

கஸ்தூரி வாழ்த்து

கஸ்தூரி வாழ்த்து

இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கஸ்தூரி "#HBDAjithKumar Big wishes have a great year" என ட்வீட் போட்டு நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். நடிகை கஸ்தூரிக்கும் இன்று பிறந்தநாள் என்பதால் அவரது ட்வீட்டுக்கு கீழ் ரசிகர்கள் அவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அருண் விஜய் வாழ்த்து

அருண் விஜய் வாழ்த்து

Happy birthday #Ajith sir! Stay blessed... #HBDAjith என நடிகர் அருண் விஜய் ட்வீட் போட்டு அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டராக அசத்தல் வில்லன் ரோலில் மிரட்டி எடுத்திருப்பார் அருண் விஜய். மீண்டும் அஜித்துடன் இணைந்து அவர் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

லவ் யூ ஆல்வேஸ் தல

லவ் யூ ஆல்வேஸ் தல

இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மங்காத்தா எனும் மரண மாஸான படத்தை அஜித்துக்கு கொடுத்தவர் வெங்கட் பிரபு. இந்நிலையில், தற்போது, ஹேப்பி பர்த்டே அண்ணா.. லவ் யூ ஆல்வேஸ் தல என #thala #ak #ajith #ajithkumar ஹாஷ்டேக்குகளை போட்டு வாழ்த்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X