Ajith Kumar Net Worth: அடேங்கப்பா.. 53 வயதில் அஜித் குமாரிடம் இத்தனை கோடி சொத்து இருக்கா?

சென்னை: 1971ம் ஆண்டு மே 1ம் தேதி பிறந்து வளர்ந்த நடிகர் அஜித் குமார் 1990ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். 1993ம் ஆண்டு அமரவாதி படத்தில் ஹீரோவாக அறிமுகமான அஜித் குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருகிறார்.

அஜித் குமாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், சோஷியல் மீடியா மொத்தமும் அஜித் ரசிகர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. #GoodBadUgly, #VidaaMuyarchi, "Happy Birthday AK" என ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகளை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Happy Birthday Ajith Kumar Here we look about his salary and net worth details

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி விஜய் ரசிகர்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து பல போஸ்ட்டுகளை போட்டு வருகின்றனர். தன்னைத்தானே செதுக்கிய அஜித் குமார் 53 வயதில் இதுவரை ஒட்டுமொத்தமாக எத்தனை கோடி சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார் என்கிற தகவலை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஹேப்பி பர்த்டே ஏகே: அல்டிமேட் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வந்த அஜித் குமாரை ஒரு கட்டத்துக்கு மேல் ரசிகர்கள் 'தல' என அன்போடு கொண்டாட ஆரம்பித்தனர். அதற்கு விதை போட்டது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படம் தான். ரசிகர்களுக்காக அந்த படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது. கில்லி படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடியது போல தீனாவை அஜித் ரசிகர்கள் தெறிக்கவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக படங்களை பண்ணி வரும் நடிகர் அஜித் குமாருக்கு சினிமா ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரெண்டு லட்டு கிடைக்குமா?: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்களில் இருந்து அப்டேட் வரவேண்டும் என ரசிகர்கள் ஆசையுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்காகவே அந்த இரண்டு படங்களின் ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

150 கோடி சம்பளம்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்துக்காக 105 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், அடுத்ததாக குட் பேட் அக்லி படத்துக்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் 150 கோடி ரூபாய் சம்பளத்தை கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'புஷ்பா புஷ்பா' பாடலை இன்று வெளியிடவுள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் அஜித் ரசிகர்களுக்கு 'குட் பேட் அக்லி' அப்டேட் அல்லது ஃபர்ஸ்ட் லுக்கை கொடுக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

சொத்து மதிப்பு: ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், முகவரி, தீனா, வில்லன், அட்டகாசம், வரலாறு, கிரீடம், பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரன், என்னை அறிந்தால், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்த அஜித் குமார் நடிகை ஷாலினியை திருமணம் செய்துக் கொண்டு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகளுடன் சந்தோஷமான குடும்பத் தலைவனாக வாழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் ஏகப்பட்ட பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்த நடிகர் அஜித்திடம் ஒட்டுமொத்தமாக 400 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

சொகுசு கார்கள்: திருவான்மியூரில் அஜித்துக்கு பிரம்மாண்ட வீடு உள்ளது. மேலும், சில வீடுகளும் சென்னையில் அவருக்கு உள்ளன. கார்கள் மற்றும் பைக்கை பொறுத்தவரையில் சொல்லவே வேண்டாம். அத்தனை பெரிய பிராண்ட் கார்களும், பைக்குகளும் அவரிடம் உள்ளன. விமானம் ஓட்டும் லைசென்ஸ், ஹெலிகாப்டர் ஓட்டும் லைசென்ஸ் என அனைத்து விதமான வாகனங்களிலும் எக்ஸ்பெர்ட்டான அஜித் குமார் உலகம் சுற்றும் வாலிபனாக தனது வேர்ல்ட் பைக் டூர் கனவையும் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X