twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    53வது பிறந்தநாள் காணும் அமீர்.. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் என புகழும் ரசிகர்கள்!

    |

    சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராகவும், நடிகராகவும், திகழ கூடியவர் அமீர் சுல்தான்.

    தமிழ் சினிமா பிரபலங்களுள் சிலர் மட்டுமே சமூக ஆர்வலராக உள்ளனர். அவர்களுள் முக்கியமான ஒருவர் அமீர் சுல்தான் ஆவார்.

    இன்று 53வது பிறந்தநாள் காணும் அமீர் சுல்தானுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறிய வண்ணம் உள்ளனர்.

    பாலாவிடம் பயிற்சி

    பாலாவிடம் பயிற்சி

    தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா தவிர்க்க முடியாத ஒரு சகாப்தம் ஆவார். பாலாவின் மிக பெரிய வெற்றி படமான சேது படத்தில் துணை இயக்குனராக பணி புரிந்தார் அமீர். அதை தொடர்ந்து பாலாவின் நந்தா படத்திலும் துணை இயக்குனராக பணிபுரிந்தார்.

    இன்றளவும் பேசப்படும் படங்கள்

    இன்றளவும் பேசப்படும் படங்கள்

    அமீர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் என நான்கு படங்களை இயக்கியுள்ளார். முதல் மூன்று படங்களும் நல்ல வரவேற்பை பெற்று இன்றளவும் ரசிகர்கள் விரும்பி பார்க்க கூடிய படமாக அமைந்துள்ளது. பருத்திவீரன் படத்திற்காக பல விருதுகளை பெற்றுள்ளார் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வடசென்னையில் அசத்தினார்

    வடசென்னையில் அசத்தினார்

    அமீர் யோகி படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் யுத்தம் செய், நினைத்தது யாரோ படங்களில் நடித்தார். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு வடசென்னை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் அமீர். அந்த கதாபாத்திரம் மிகவும் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு பல பாராட்டுகளை தேடி தந்தது.

    காத்திருக்கும் ரசிகர்கள்

    காத்திருக்கும் ரசிகர்கள்

    இயக்குனராகவும் நல்ல படங்களை கொடுத்துள்ளார், நடிகராகவும் வட சென்னை படத்தில் தன் திறமையை வெளி காட்டியுள்ளார். இதையடுத்து அமீர் இயக்குனராக தொடர்வாரா? அல்லது நடிகராக தொடர்வாரா? என ரசிகர்கள் அவருடைய அடுத்த நகர்வை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

    English summary
    Happy Birthday Amir Sultan : Wishes pour in from fans, friends
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X