இசையமைப்பாளர் அனிருத்துக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தில் தெறிக்கும் வாழ்த்துக்கள்!
சென்னை : இசையமைப்பாளர்களில் அதிக ரசிகர் கூட்டத்தைக் கொண்டு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் கலக்கி வருபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்.
நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இவர் இணைந்து பணியாற்றும் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற நிலையில் இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இப்போதுள்ள இளசுகளுக்கு ஏற்றவாறு இசையமைப்பதில் வல்லவரான அனிருத் அக்டோபர் 16 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

பல்வேறு சாதனைகள்
பிரபலமான திரைக் குடும்பத்திலிருந்து வந்த அனிருத், இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல முகங்களை கொண்டுள்ளார். இசையமைத்த முதல் திரைப்படத்தின் பாடல்கள் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் அவை பல்வேறு சாதனைகளையும் புரிந்தது.

அதிக பார்வையாளர்களை
நடிகர் தனுஷின் மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 3 வெளியாவதற்கு முன்பே பாடல் அனைத்தும் வெளியிடப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் இந்த திரைப்படத்தில் வரும் "ஒய் திஸ் கொலவெறி" பாடல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வைரலாகி யூடியூபில் அதிக பார்வையாளர்களை கொண்ட தமிழ் பாடல் என்ற பெருமையை பெற்றது.

இளசுகளை கவரும்
இவ்வாறு இசையமைத்த முதல் திரைப்படத்திலேயே உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அனிருத் தான் இசையமைக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களில் இளசுகளை கவரும் வகையில் மெலோடி, குத்து பாட்டு என அனைத்திலும் தனித்துவமான இசையை கலந்து அளித்து அனைவரையும் கவர்ந்தார்.

எதிர்நீச்சல்
பல படங்கள் இவரின் இசைக்காகவே திரையரங்குகளில் பல நாட்கள் ஓடியது என்ற நிலையில் 3 திரைப்படம் ரசிகர்களை பெரிதாகக் கவராத நிலையிலும் பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட்டானது. 3 திரைப்படத்தை தொடர்ந்து இவர் இசை அமைத்த எதிர்நீச்சல் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக சிவகார்த்திகேயனின் வெற்றி திரைப்பயணத்தில் எதிர்நீச்சல் மிகப்பெரிய உந்து சக்தியாக அமைந்தது.

டாக்டர் வரை
எதிர்நீச்சல் திரைப்படத்தை அடுத்து தொடர்ந்து கார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களில் இசையமைத்து வந்த இவர்களின் காம்போ வெற்றிகரமாக அமைய டாக்டர் வரை இந்தக் கூட்டணி தொடர்ந்து வருகிறது.

தெலுங்கு திரைப்படம்
வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, நானும் ரவுடி தான், ரெமோ, மாஸ்டர், டாக்டர் என அனிருத்தின் வெற்றி ஆல்பங்களின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகிறது. தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் ரவிச்சந்திரன் அதே சமயம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகர்களாக உள்ள நானி, பவன் கல்யாண் திரைப்படங்களுக்கு இசையமைத்து தெலுங்கு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

லிரிக்ஸ் வீடியோ வெளியீடு
இசையில் புது ட்ரெண்டை உருவாக்கி தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கும் அனிருத் திறமையான இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் சிறந்த பாடகராகவும் இருந்துவரும் நிலையில் அக்டோபர் 16ம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி மாஸ்டர் படக்குழு "குய்ட் பண்ணுடா" பாடலின் லிரிக்ஸ் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு அனிருத் பிறந்தநாள் பரிசாக வெளியிட உள்ளது. அதைத்தொடர்ந்து ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து இணையதளத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











